பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. என்ன குறை உடையேன்?

அன்பர்கள் இறைவனை முக்கரணங்களிலுைம் வழிபடு வார்கள்; அவனுடைய திருவடியையே தம்முடைய லட்சிய மாகக் கொண்டு வாழ்வார்கள். தாமரை மலரைப்போன்ற அவனுடைய திருவடிகளைத் தொழுவார்கள்; இது உடம்பின் செயல். அவனுடைய புகழைப் பலபடியாகப் பாடி இன்புறு வார்கள்; இது வாக்கின் செயல்.

பூங்கழல் தொழுதும் பரவியும். அவனுடைய திருவடியை எப்போதும் அவர்கள் தம் மனத் தில் பதித்துக் கொண்டிருப்பார்கள். அந்த மனத்தில் வேறு எண்ணம் ஏதும் இராது. புண்ணியமெல்லாம் திரண்ட உருவ மாக உள்ளவனும் எல்லாவற்றிலும் புனிதமான வடிவம் உள்ள வனும் ஆகிய அவனை உள்ளத்தில் வைப்பதைவிடப் புண்ணி யச் செயல் வேறில்லை. அந்தப் புண்ணியனை உள்ளத்தில் வைத்தால் பாவமே அங்கே சாராது. புனிதம் மிக்க அவனைத் தியானிக்கும் உள்ளத்தில் மாசே தலை காட்டாது. கங்கை பாயும் இடத்தில் அழுக்குச் சேராதது போல அவனை எண்ணி யிருக்கும் மனத்தில் புனிதமற்ற எந்த நினைவும் எழாது.

அவனுடைய பொலிவு பெற்ற திருவடி தம் உள்ளத்தே இருக்கப் பெற்றவர், அப்பர் சுவாமிகள். அதனினும் பெரிய பேறு வேறு என்ன இருக்கிறது?

புண்ணியா, புனிதா, உன் பொற்கழல் ஈங்கு இருக்கப் பெற்றேன். -

தங்கக் குவியலைத் தம் அகத்தில் வைத்துள்ளவர்களுக்கு

வறுமையால் துன்பம் வராது. வாழ்க்கைக்கு வேண்டிய வளங் களையெல்லாம் அவர்கள் பெறலாம். பிறர் வீடு, உடை, அணி