பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 அப்பர் தேவார அமுது

கலன், உணவு முதலியவற்ருல் குறையுடையவர்களானுலும், அவர்களுக்கு அத்தகைய குறை யாதும் இராது. 'பொருளி லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு’ என்பது குறள். பொருள் இருந்தால் உலக வாழ்க்கை வளம் பெற்று விளங் கும்.

பரம்பொருளையே தம் அகத்தில் வைத்தவர்களுக்கு எந்தப் பெருங்குறையும் இராது. பணம் படைத்தவர்கள் எவ்வளவு சிறப்பாக வாழ்ந்தாலும் இறுதியில் எல்லாவற்றையும் விட்டு விட்டு இறந்து போகத்தான் வேண்டும். பணம் மரணத்தைப் போக்க வல்லதன்று. பொருளுடையார்க்குப் பிறப்பு இறப்பு என்னும் துன்பங்கள் இல்லை என்று சொல்ல முடியுமா? -

ஆனல் பரம்பொருளை அகத்தே வைத்தவர்களுக்கு இந்த உலக வாழ்விலே துன்பம் இராதது மட்டும் அன்று; இந்தப் பிறவிக்குப்பின் மீண்டும் பிறந்து இறந்து திரியும் துன்பமே இல்லாமல் போய்விடும். அவர்களுக்கு எந்தக் குறையும் வராது.

'இம்மை யேதரும் சோறும் கூறையும்;

ஏத்த லாம்; இடர் கெடலுமாம்; அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்கு

யாதும் ஐயுற வில்லையே’

என்று சுந்தரர் பாடுவார். ஆகவே, இறைவனுடைய பொற் கழலாகிய வைப்பு நிதியை அகத்திலே வைத்தவர்களுக்கு ஒரு குறையும் இராது. .

உன் பொற் கழல் ஈங்கு இருக்கப் பெற்றேன்: .

என்ன குறை உடையேன்!

என்று பெருமிதத்தோடு பாடுகிருர், அப்பர் சுவாமிகள். குறை விலா நிறைவாகிய இறைவன் திருவடியை நிதியம் போல உள்ளத்தே ஈட்டி வைத்தவர் அவர். ஆகவே குறையேதும் இல்லாத நிறைவையுடைய வாழ்வை அவர் பெற்ருர். -