பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 அப்பர் தேவார அமுது:

மாவொடு மாதுளம் பல

தீங்கனி சிதறும் திருவாரூர் அம்மானே!

திருவாரூரின் நிலவளத்தை இந்தக் காட்சி காட்டு கின்றது. அந்த ஊரில் வாழ்வாருக்குக் கணிகளால் குறை. வில்லை. அங்குள்ள இறைவனை நினைப்பாருக்கு எதனுலும் குறைவில்லை.

பூங்கழல் தொழுதும் பரவியும்

புண்ணியா புனிதாஉன் பொற்கழல் ஈங்கு இருக்கப் பெற்றேன்;

என்ன குறைஉடையேன்? ஓங்கு தெங்குஇலை யார்கமுகுஇள

வாழை மாவொடு மாதுளம்பல தீங்கனி சிதறும்

திருவாரூர் அம்மானே!

  • உயர்ந்து ஓங்கி வளரும் தென்னையும், இலைகள் நிரம் பிய கமுக மரங்களும், இளவாழை மரங்களும், மாமரங்களும், மாதுள மரங்களும் பல வேறு சுவையுள்ள இனிய கணிகளை உதிர்க்கும் திருவாரூரில் எழுந்தருளியுள்ள தலைவனே, நின்னு டைய தாமரைமலர் போன்ற திருவடியை உடம்பால் வணங்கி யும் வாயால் புகழ்ந்தும் என் உள்ளமாகிய இவ்விடத்தில் இருக்கும் பேறு பெற்றேன்; இனி யான் என்ன குறையை உடையேன்? :

(பூங்கழல்-கழலை உடைய தாமரை மலரைப் போன்ற திருவடி, கழல்: ஆகுபெயர்; பூவேலை செய்யப் பெற்ற கழலை அணிந்த திருவடி எனலும் ஆம்.

தொழுவது கையின் செயலானலும் இங்கே பொதுவாக உடம்பால் வணங்குவதைக் குறித்தது; உபலட்சணத்தால் வணங்குதலையும் கொள்ளலாம். பரவுதல்-புகழுதல். இது வாக் கின் செயல். புண்ணியன்- அடியவர்கள் செய்த புண்ணியமே வடிவாக உள்ளவன்; புண்ணிய மூர்த்தி என்பது வழக்கு