பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன குறை உடையேன்? 83猫

புனிதாதூய்மையான பொருள்கள் யாவற்றினும் தூயவனே; தன்னச் சார்ந்த பொருள்களுக்கெல்லாம் புனிதத்தை அருளும் தூயவன் அவன். பொற்கழல்-பொன்லைாகிய கழலை அணிந்த திருவடி; பொலிவு பெற்ற திருவடி என்பதும் ஆம்; அப்போது அது அடையடுத்த ஆகுபெயர். ஈங்கு என்றது மனத்தை; இது நெஞ்சறி சுட்டு. இறைவன் உள்ளத்தில் இருப்பதைவிடப் பெரிய பேறு இன்மையின், இருக்கப் பெற்றேன்’ என்ருர். என்ன-எத்தகைய. மாவொடு: ஒடு, எண் ஒடு, அதனைத் தெங்கு முதலியவற்ருேடும் கூட்டுக. பல தீங்கனி-பல இனிய கனிகளை; பலா என்பது குறுகி நின்றதெனக் கொண்டு பலாமரத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்; சிதறும்-உதிரச் செய்யும். அம்மான்தலைவன், இறைவன்.

இறைவன் வாழும் திருவாரூரில் வளம் நிரம்பியிருக் கிறது. அவன் வாழும் உள்ளத்திலும் குறைவிலா நிறைவு இருக்கிறது. ஏ:விளி.1

நான்காம் திருமுறையில் 20-ஆம் திருப்பகத்தில் உள்ள நாலாவது பாட்டு இது. -