பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனைத்திலும் இலயம் 85 சார்ந்து எனக்குப் பகையாக நிற்கும் அவரை அடக்கியாள லாம் என்று எண்ணி யார் யாரையோ நாடிப் போனேன். அப்படிப் போன இடங்களிலெல்லாம் அவர்களும் பேயைப் போல அந்த மனத்தினர் பற்றி அலைக்க அவரோடு சேர்ந்து ஆட்டம் போடுகிருர்கள். பைத்தியம் பிடித்தவன் வேருெரு பைத்தியக்காரனேடு சேர்ந்தால் என்ன ஆகும்? இரண்டு பைத்தியங்களும் சேர்ந்து கொண்டு பின்னும் ஆட்டம் போடும்; அமளி துமளிப்படுத்தும். அப்போதுதான் ஓர் உண்மையை அறிந்து கொண்டேன். நம்மைப் போலவே மக்கள் யாவரும் மனத்தினருடைய ஆட்சியிலேதான் அடங்கி உழல்கிருர்கள் என்பது தெரிந்தது. அப்படியால்ை எங்கே சென்ருல் இந்த மனம் என்னும் பேயை அடக்கி வழிப்படுத்த முடியும் என்று யோசித்துப் பார்த்தேன். அந்த யோசனையைச் செய்வதற்காவது மனத்தினர் இடம் கொடுத்தாரே; அதைப் போற்ற வேண்டும்.” . .

பிறகு இங்கே எப்படி வந்தாய்?" என்று இறைவன் கேட்பது போன்ற தோற்றம் உண்டாயிற்று."

ఒతడిrు பற்றிக் கேள்வியுற்றேன். எவ்வளவு கொடு மையுடையவனாக இருந்தாலும் உன்னை அடைந்தால் நன்மை உண்டாகும் என்று தெரிந்து கொண்டேன்.” -

"எவ்வாறு தெரிந்து கொண்டாய்”

தேவர்கள் அமுது பெறப் பாற்கடலைக் கடைந்தபோது ஆலகால விடம் தோன்றியதாம். அப்போது எல்லோரும் மய்ங்கி விழுந்தார்கள். உன்னை எண்ணி அரற்றினர்களாம். அவர்களிடம் கருணை பூண்டு அந்த நஞ்சத்தை வாங்கி உண்டு உன் நெஞ்சிலே நிறுத்திக் கொண்டாயாம். இப்போது.அந்த நஞ்சு யாரும் காண உன் கழுத்தில் இருந்து ஒளிர்கிறது. அந்த நீல கண்டத்தை அன்பர்கள் வாழ்த்திப் புகழ்கிருர்கள். அக்கறை, மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே என்று

தே-6