பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- அனைத்திலும் இலயம் 39 யல்லாத புன்னெறிகளின்மேல் என்னை இழுத்துச் சென்று முழங்குகிறது; அடியேன் இந்த அல்லலினின்றும் தப்பிப் பிழைக்க என்ன செய்வேன்! ஆலகால விடமாகிய கறுப்பை அணிந்த நீலகண்டப் பெருமானே, தினையளவு போதுகூட இடையீடின்றி வேத ஒலி குறையாமல் கேட்கும் தில்லை நகருள் திருச்சிற்றம்பலத்திலே, அண்டசராசரங்கள் எல்லா வற்றிலும் ஊடே நின்று இயக்கும் நின் திருவடிச் சதியின்

பெரும்ையைக் காணும்பொருட்டே அடியேன் வந்தது.* -

(மனத்தினர். ஆர், இகழ்ச்சிக் குறிப்பு. திகைத்து-நெறி தெரியாது மயங்கி, மாண்பு அலா நெறிகள்-பேரின்பத்தை அடையும் மாட்சிக்கு ஒவ்வாத வழிகள். கனைப்பர்-இழுத்துக் சென்று முழங்குவர்; எனக்கே வெற்றி என்று ஜய பேரிகை கொட்டுவது போல முழங்குவர். ஆல்: அசை. என்.செய் கேன்-இந்த அல்லலைப் போக்க எந்த உபாயத்தை மேற். கொள்வேன். ஒ:அசை. கறை-ஆலகால நஞ்சத்தின் கறுப்பு 'கறைமிட றணியலும் அணிந்தன்று’ என்பது புறநானூறு. தினைத்தனை-சிறிது பொழுதேனும்; தினை என்பது மிகச் சிறிய அளவைக் குறிக்கும் சொல், தினையளவும் குற்ையாமல் வேதங்களைச் சாங்கோபாங்கமாக ஒதும் தில்லை என்றும் பொருள் கொள்ளலாம். தில்லை மூவாயிரவர்ாகிய அந்தணர்கள் வாழும் இடமாதலின் வேதம் குன்ருமல் ஒலித்தது. தில்லை, தலத்தின் பெயர்; சிற்றம்பலம், நடராசப் பெருமான் ஆடும் அரங்கின் திருநாமம். அனைத்தும்-எல்லாப் பொருள்களிலும். இயயம்தாளம். காண்பான்-காண்பதற்காக. வந்தவாறு காண்பான் என்று கூட்டுக. வந்தவாறே: ஏகாரம், ஈற்றசை.)

இறைவனுடைய திருநடனத்தால் உலகமெல்லாம் இயங்குகிறது என்பது கருத்து.

இந்தப் பாசுரம் நான்காம் திருமுறையில் 23-ஆம்.திருப் பதிகத்தில் 8-ஆவது திருப்பாட்டாக அம்ைந்துள்ளது.