பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. எப்போதும் உறங்கும் தொண்டர்

காமெல்லாம் பகலில் பல வேலைகளைப் பார்த்து விட்டு: இரவில் படுத்து உறங்குவோம். உலக இயலில் ஈடுபட்ட நமக்கு உலக நினைவு இருப்பது ஜாக்கிரம் என்றும் அதை மறந்து உறங்குவது சுழுத்தி என்றும் சொல்கிருேம், உலகப் பொருள்களைக் கண்டு கொண்டிருப்பதுதான் நம்முடைய விழிப்பு நிலை. நம்முடைய தூக்கம் உலகையும் உடம்பையும் மறந்த தூக்கம். பெரும்பாலும் இரவில் இந்த உறக்கத்தை அடைகிருேம்.

எப்போதும் தூங்குகிறவர்கள் யாராவது உண்டா? கும்ப கர்ணன் கூடப் பல காலம் உறங்கிலுைம் சில காலம் விழித்துக் கொண்டிருப்பான். அதனுல்தானே அவன் போர் செய்ய முடிந்தது?

ஆனல் எப்போதும் உறங்குபவர்கள் சிலர் இருக்கிருர்கள். கண்முன் உள்ள பொருள்களைக் காணுமல் கண்ணை மூடிக் கொண்டு நாம் உறங்குகிருேம். அவர்கள் கண்ணத் திறந்து கொண்டே உறங்குவார்கள். அது எப்படி முடியும் என்று

கேட்கலாம்.

சில சமயம் நாம் எதையோ நின்த்துக் கொண்டிருப் போம். அந்த நினைவில் ஆழ்ந்திருக்கும்போது நம் கண் விழித்திருந்தாலும் எதிரே நடப்பது தெரியாமல் இருக்கும் நிலையும் உண்டு. உண்முகமான நோக்கிலே ஆழ்ந்திருக்கும் போது புறப்பார்வை சுருங்கும். கவலையோடு யோசனையில் ஆழ்ந்திருப்பவர்களைப் பாருங்கள். அவர் முன் நாய் போயிற்ரு, நரி போயிற்ரு என்ருல், "அதைக் கவனிக்கவில்லை” என்பார்கள். கண் விழித்துக் கொண்டிருந்தாலும் கவனம் வேறிடத்தில் இருப்பதால் முன்னலே சென்றதைப் பார்க்க வில்லை.