உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110|| அப்பாத்துரையம் 11


ஹஸன் கங்கு பகமனி 1347 முதல் 1358 வரை அரசாண்டான். அவன் பின்னோர்கள் 15ஆம் நூற்றாண்டின் இறுதிவரையில் பேரரசை ஆற்றலுடையதாக்கி ஆட்சி நடத்தினர். ஆனால், மாமூது அரசன் (1482-1518) ஆட்சியில் சிற்றரசர், பெருமக்கள் நடுவாட்சியை எதிர்த்துக் கிளர்ந்தெழுந்தனர். அவன் ஆட்சி முடிவுக்குள் பேரரசின் பகுதிகள் பீஜப்பூர், கோல்கொண்டா, அகமது நகர், பீடார், பீரார் என்ற ஐந்து அரசுகளாகப் பிரிவுற்றன.

பீஜப்பூர் அரசர் ஆடில் ஷாக்கள் என்று அழைக்கப்பட்டனர். அவ்வரசின் முதல்வன் யூசுஃப் பகமனிப் பேரரசின் கீழடக்கியவனாகவே இருந்துகொண்டு விசய நகரத்தைத்தாக்கி வெற்றிகண்டு சூறையாடினான். அவன் மகன் இஸ்மாயில் காலத்தில் பீஜப்பூர் பாமனியின் மேலாட்சியை உதறித் தள்ளித் தனியாட்சி நிறுவிற்று. முகம்மது காலத்தில் (1626-1686) பீஜப்பூர் அரசில் பணியாளராயிருந்த ஷாஜி என்ற மகாராஷ்டிர வீரன் மகனான சிவாஜி, கொங்காணக்கரையில் கிளர்ச்சிக் கொடி ஏந்தி ஒரு தனியரசுக்கு அடிகோலினான். இப்போது விசயநகரத்தின் ஆற்றல் மிகத் தளர்ந்திருந்ததனால் முகம்மது தன் அரசை மைசூர் கடந்து தமிழகத்தில் தஞ்சைவரை பரப்பினான். ஆனால், அடுத்த அரசன் ஆட்சிக்குள் கொங்காணம் முழுவதும் சிவாஜி கைக்குள்ளாயிற்று. சிவாஜியின் தம்பி எகோஜி தமிழகப் பகுதியில் தஞ்சையைக் கைக்கொண்டு ஆண்டான்.

கடைசி பீஜப்பூர் அரசன் சிகந்தர் (1672-1686) காலத்தின் இறுதியில் பீஜப்பூர் தில்லியில் அந்நாளைப் பேரரசன் அவுரங்கசீப்பினால் கைக்கொள்ளப்பட்டது.

கோல்கொண்டா அரசர் குத்ப்ஷாக்கள் என்று அழைக்கப்பட்டனர். முதல் அரசன் குலீப், பகமனியின் கீழ் தெலிங்காணத்தை ஆண்டவன். 1512 அல்லது 1518-இல் அவன் கோல்கொண்டாவைத் தலைநகராகக் கொண்டு தனி அரசு நிறுவினான். இப்ரஹீம் அரசன் காலத்தில் (1550-1581) வேங்கிநாடு என்று முன்பு அழைக்கப்பட்டிருந்த ஆந்திரக் கீழ்க்கரைப்பகுதி கோல்கொண்டாவுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டது. கிட்டத்-