30. மற்ற மொழியாளர் ஏற்பார்களா?
திராவிடர், திராவிடம் என்ற சொற்களையே வழங்காமல் தமிழ், தமிழகம் என்ற சொற்களை மட்டும் தமிழர் வழங்கினால், அதற்குப் பதில் மலையாளம், கேரளம் என்ற சொற்களை மட்டுமே மலையாளிகள் வழங்கினால், கன்னடம், கர்நாடகம் என்ற சொற்களை மட்டும் கன்னடியர் வழங்கினால், தெலுங்கு ஆந்திரம் என்ற சொற்களை மட்டுமே தெலுங்கர் வழங்கினால், அதனால் வரும் கேடுகளை மேல்வரும் நிலைகளே சுட்டிக் காட்டும்.
திராவிடம் என்ற சொல்லை மலையாளிகள் ஏற்பார்களா?
ஏற்காவிட்டால் கேடு முதலில் அவர்களுக்கு, பின்தான் அவர்கள் இனத்தவர்களாகிய - சுற்றத்தார்களாகிய நமக்கு! தமிழ் மொழி பேசும் திராவிட இனத்தவர் மலையாளிகளிடம் மாமன் மைத்துனர், சிற்றப்பன் பிள்ளை, பெரியப்பன் பிள்ளைபோல அன்புரிமையுடன் மட்டும்தான் பேசுவர், பேச முடியும். மலையாள நாட்டறிஞரே, தந்தை தாய்போல், அண்ணன் அக்காள்போல அவர்களுக்கு விளங்க வேண்டும். அதை ஓரளவு அவர்கள் செய்யா மலில்லை. ஆனால், வள்ளையர் ஆட்சியிலிருந்து வடதிசைக்குத்தான் அவர்கள் விடுதலை வாங்கித் தந்துள்ளனர். 'கேரளம்' அமைந்தபோதுகூடத் தலைப்பாகையில்லாத அடிமைகள் தலைப்பாகை அணியும் அடிமை உரிமை வாங்கியிருக்கிறார்களென்ற நிலை ஏற்பட்டி ருக்கிறதே தவிர, வேறில்லை. திராவிட நாடு அமையும் காலத்தில், திராவிட நாட்டுக் கூட்டுறவின் சரிசம உரிமை உறுப்பி னராகத் திராவிடப் பண்பாட்டடிப்படையில் சுதந்தர சம்மேளனம் அமையும்போது தான், 'தன்னுரிமை' என்றால் என்ன என்பதை - குடியாட்சியென்றால் என்ன என்பதை - சம தருமம், பொது வுடைமை என்றால் என்ன என்பதை - இவற்றையெல்லாம்விட