உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




250) || — —

அப்பாத்துரையம் - 11

உயரிய வள்ளுவர் பண்புடைய 'தேசியம்' 'நாட்டுரிமை' என்றால் என்ன என்பதை அவர்கள் கொள்கை முறையிலும் சரி, அனுபவ முறையிலும் சரி அறிந்து கொள்ள முடியும்.

கேரளம்

'திராவிடம் என்ற சொல்லை வழங்காத கேரளம் தேய்ந்த இமயவரம்பன் சேரலாதனின் கேரளமல்ல செங்குட்டுவன், இளங்கோவின் கேரளமல்ல.

-

திராவிடம் என்ற சொல்லை வழங்காத கேரளம் பண்டைக் கேரளத்தின் நாடகக் கலையின் அடிப்படையையே இழந்த கேரளமாகும். பழைய திருவாங்கூர் அரசியலாரின் அரசியல் வெளியீடொன்று ‘திருவாங்கூரில் கதகளி' என்னும் தலைப்புடன் வெளியிடப்பட்டுள்ளது. கதகளிக்கு இன்னும் வழக்கிலுள்ள

சைக் கருவிகளின் பட்டியலொன்றையும் அது தந்துள்ளது. நூற்றுக்கு மேற்பட்ட இசைக் கருவிகள் - தமிழர் கண்டறியாத, கேட்டறியாத சங்க இலக்கியத்தில் மட்டுமே புலவர் பெயரளவில் காணக்கூடிய கருவிகள் - அப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இவை இன்றள வும் திருவாங்கூரில் வழங்கும் கருவிகள் மட்டுமே. இவற்றுள் இன்னும் மிகப் பல கருவிகளையும் சேர்த்து ருநூறுக்கு மேற்பட்ட கருவிகளின் பெயர்கள் 'சிலப்பதிகாரம் என்ற பண்டை மலையாளப் பெருங்காப்பியத்தில் காணப் படுகின்றன' என்று அரசாங்க வெளியீடு கூறுகிறது.

பழைய கொச்சி அரசர்கள் மலையாளிகள் பச்சை மலையாளிகள்தாம். ஆனால், அவர்கள் தாம் நேரே சேரர் பரம்பரையில் வந்தவர்கள் என்று உரிமை கொண்டாடுகிறார்கள். பதிற்றுப்பத்துப் பாடிய புலவர்களுக்குப் பத்து நூறாயிரம், கோடிக்கணக்கான பொன்காசுகளை எம் முன்னோர்கள் கொடுத்தார்கள் என்று பெருமையுடன் கூறிக்கொள்கிறார்கள். திருவாங்கூர் அரச மரபினரும் இதனுடன் போட்டியிட்டு நாங்களும் அதே மரபினர்தான் என்று போராடுகிறார்கள். அத்துடன் சிலப்பதிகாரத்தில் செங்குட்டுவன் முன் சாக்கியர் கூத்து நாடகமாடிய அதே பறையூர்ச் சாக்கையர்குடி மரபினரை இன்றும் அதே நாடகமாடுவித்து, மாதச் சம்பளமும் படிகளும் கொடுத்து வருகின்றனர் திருவாங்கூர் பழைய அரச மரபினர்.

தொல்காப்பியம் அரங்கேற்றியபோது அதை அவைத் தலைவராயிருந்து கேட்ட அதங்கோட்டாசான் குடி இன்னும்