இதுதான் திராவிட நாடு
251
அதங்கோட்டாசான் என்ற பெயருடனே, அந்தக் குடியினால் பெருமை பெற்ற பெயருடைய ஊரிலே - திருவதங்கோட்டிலே உள்ளது. இது இன்றைய குமரி மாவட்டத்தில் நாகர்கோவிலுக்கும் இரணியலுக்கும் இடையே உள்ளது. திருவாங்கூரின் பழந்தலை நகர் இதுவே திருவாங்கூருக்கு அப்பெயர் தந்ததும் இந்த அதங்கோடே! தொல்காப்பியருக்கு ஆசிரியராயிருந்த புலவர் பெயரால்தான் கேரளத்தின் ஒரு பகுதியாகிய திருவாங்கூர் இன்றும் அழைக்கப்படுகிறது.
-
திராவிடம் என்ற சொல்லை மறுத்தால், மறந்தால், மலையாளம் சிறு மலையாளமாய், கேரளம் தேய்ந்த, தேயும் அடிமைக் கேரளமாய் இருக்க முடியுமேயன்றிக் கடம்பரைக் கடற்படையால் வென்ற சேரர் பரம்பரையாய், உண்மைத் தேசியக் கேரளமாய் நில்லாது.
மலையாளத்துக்குக் கூறியதே ஆந்திரத்துக்கும் அமையும்.
உண்மையில் இன்றைய ஆந்திரம் ‘ஆந்திரம்' என்ற பெயர் கூறவே வெட்கமடைய வேண்டும். ஆந்திரப் பேரரசர் ஆண்ட விசால ஆந்திரம் இன்றைய கட்டெறும்பு ஆந்திரமுமல்ல, அடிமை ஆந்திரமுமல்ல - இன்றைய இந்தியாவில் பெரும் பகுதியையும் பர்மா முழுவதையும் மலாயாவில் ஒரு பகுதியையும் உட்கொண்டதாகும். முக்கலிங்கமாண்டவர் (திரிசலிங்காதிபதி) முக்கடல் மன்னர் (த்ரிசமுத்ராதிபதி) என்ற பெயர்கள் பட்டங்கள் அவர்கள் பெருமை எல்லையை மட்டுமன்றி, வீழ்ந்த வகையையும் (சமஸ் கிருதப் பட்டங்களையும்) ஒருங்கே சுட்டிக்காட்டும்.
ஆந்திரம் மீண்டும் அதே தேசிய உயிராற்றல் பெற வேண்டுமானால், அது பாரத ஆந்திரமாயிருந்து பயனில்லை. சுயேச்சையும் சுயாதீனமுமுடைய திராவிட ஆந்திரமாக வேண்டும்.
கன்னடத்தின் செய்தியும் இதுவே.
கன்னட நாடு என்று இன்று கூறப்படும் பகுதி முழுவதும், சேலம், கோயமுத்தூர், நீலகிரி மாவட்டங்களும் சேர்ந்ததுதான் பண்டைத் தமிழரின் கொங்குநாடு. கன்னடம் என்பது கொங்கு தமிழே.பழங்கன்னடப் புலவர்கள் கன்னட நாட்டெல்லையைக் காவேரி முதல் கோதாவரிவரை என்று கூறியது இதனாலேயே.