(252
அப்பாத்துரையம் - 11
தெலுங்கர் 'திராவிடம்' என்ற சொல்லை மறந்ததனால், வட எல்லையில் ஒரியாவை மட்டுமன்றித் தெலுங்கரும் திராவிடப் பழங்குடி மொழியினரும் வாழும் கஞ்சம், விசாகப்பட்டின மாவட்டங்களையும் வடவரிடம் கோட்டை விட்டது போலவே, கன்னடியரும் வடதிசையில் தம் எல்லையின் பெரும்பகுதியை வடவருக்குக் கோட்டை விட்டுள்ளனர்.
தெலுங்கர், கன்னடியர் பகுதிகளில் திராவிட இயக்கத்தை நம் கன்னடத் தாய்மொழி கொண்ட பெரியார் பரப்பியிருந்தால், தெலுங்கர், கன்னடியர் 'திராவிடம்' என்ற சொல்லைப் போர்க் குரலாகக் கொண்டிருந்தால், வடதிசையில் வளமான விந்திய மலைப் பகுதிகளைக் கையிழந்திருக்க மாட்டார்கள்.
நீதிக்கட்சிக் காலத்தில் மராத்தியர்கூடத் தென்னாட்டு இயக்கத்தில் பங்குகொண்டிருந்தனர். தேசியப் பெயரால் பிற்போக்காளர் செய்த சூழ்ச்சியால் அவர்கள் விலகி நின்றதாலேயே, சிவாஜி பரம்பரையினர், சிவாஜியையே தேசிய வீரத்துக்கு இலக்காகவும், 'இராஷ்டிரம்' என்ற சொல்லையே தேசியத்துக்குரிய இந்தியச் சொல்லாகவும் கொண்ட தேசியத்தில் இன்று அவர்கள் உரிமை கெட்டு அவல நிலையடைந்திருக்க மாட்டார்கள். அவர்கள் திராவிட இனக்கலப்பே அவர்களை வீரராக்கிற்று - வடவர் அவர்களை ஒதுக்கும்படி செய்வதும் அதுவே.
-
திராவிடம் என்ற சொல் தமிழர்க்கு மட்டுமன்று, தென்னாட்டவர் அனைவருக்குமே வருங்காலத்தில் ஆசியாவுக்கே - உலகுக்கே புத்தூக்கமும் புது மலர்ச்சியும் ஊட்டவல்ல சொல். தேய்ந்த தமிழகத்தின் தேய்வை, அடிமைத் தமிழகத்தின் அடிமையை, வரலாறறியாத, பண்பறியாத தமிழகத்தில் இருட்கால நிலையை அணைத்துக் கொள் கிறவர்கள் வாதத்திற்குள் புகுமுன், அவர்கள் மன இருள் காட்ட வை போதியவை.