254
அப்பாத்துரையம் - 11
யுவான் சுவாங் காஞ்சிக்கு வந்து அங்கே ஆண்டுக் கணக்கில் தங்கியிருந்தான்.அவன் காஞ்சியை உட்கொண்ட தென்னாட்டைத் திராவிடம் என்ற பெயராலேயே அறிந்து வழங்கியுள்ளான். இது தேவார காலத்துக்கே முற்பட்ட பழமை வாய்ந்த வழக்கு. புராணங் களில் மிகப் பழமை வாய்ந்தவற்றில் ‘திராவிட நாடு' திராவிடத்து அரசர் செய்திகள் பல கூறப்படுகின்றன. பாரத இராமாயணங் களிலும் அதற்கு முற்பட்ட ஏடுகளிலும் சில சமயம் தமிழகப் பகுதியும் மிகப் பல சமயம் வட ஆந்திரப் பகுதியும் திராவிடம் என்று சுட்டப்பட்டுள்ளது. கி. மு. 2 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சாரவேலன் திராவிட அரசர் மூவரை வென்றதாகக் குறிக்கிறான் - இவர்கள் சேர சோழ பாண்டியராகிய பண்டைத் தமிழக மூவேந்தர்களேயாவர்.
இந்த வழக்குக்கூட ஆரியர் வழக்குத்தான் என்று வலிந்து தனித் தமிழ் வெறியர் வேடமிட்டுக் கூத்தாடுவர் வீடணப்படை வீரர்கள். 'திராவிடர்' என்ற பெயர் ஆரியரிட்ட பெயரல்ல. ஆனால், வாதத்துக்காக அவ்வாறே வைத்துக் கொண்டாலும், இந்தியாவுக்கு இந்தியா என்ற பெயர் கொடுத்தது யார் என்று அவர்கள் தம்மைத் தாமே கேட்டுக்கொள்ள மறப்பவர் ஆகின்றனர். தமிழ் இலக்கிய வழக்கிலோ நிகண்டிலோ இந் நாளைய அகர வரிசையிலோகூட அப் பெயர் காணமுடியாது. ‘இந்தியா, ‘இந்து' என்ற இரு சொற்களையுமே ஆங்கில அகராதி, பழைய கிரேக்கர் வழக்கில் காணலாமேயன்றி, வேறு எந்த இந்திய மொழியின் இலக்கியத்திலோ நிகண்டிலோ, அகராதியிலோ - சமஸ்கிருத இலக்கியத்திலோ நிகண்டிலோ, அகராதியிலோ கூட இன்றும் காணமுடியாது.
சமஸ்கிருதத்தில் இந்தியா என்று எழுத்து வடிவில் எவரும் இதுவரை எழுதியது கிடையாது என்பதுகூடக் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் அத்தகைய வழக்கு இல்லாததனாலேயே 'இந்தி’ மொழியாளர் முதலிய வட இந்தியர் இன்னும் ‘இந்தியா' என்று கீழ் திசை வழக்கில் எழுதாமல் 'இண்டியா' என்று ஆங்கில ஒலிப்பு முறைப்படி எழுதுகின்றனர்.
அதுமட்டுமோ! இந்தியா, இந்து, இந்தி மூன்றையுமே கீழ்திசை முகமதியர் ஹிந்த், ஹிந்து, ஹிந்தி என்று குறித்தனர். இரு சொற்களில் மட்டும் கீழ்திசை அயலார் வழக்கைப் பாரதம் ஏற்று,