தென்னாடு 47
பழந்திராவிடச் சொல்லே என்று கருதுகிறார். இது தமிழில் கொடி என்ற பொருளையும் கன்னடதுளு மொழிகளில் துணி என்ற பொருளையும் தருகிறது.
வேத, ஆரிய, மொழியில் வாணிகச் சொற்கள் மட்டுமின்றி, அணு, அரணி (காட்டுச்சுள்ளி), கருமாரா (கருமான்), பலம் (பழம்), பீசம் (விதை), மயூரம் (மயில்), ராத்திரி (இரவு), ரூபம் (உருவம்), மீனம் (மீன்), நீரம் (நீர்), புஷ்பம் (பூ), நானா (பல- நால்+நால்), காலம், குடி, கணம் முதலிய சொற்களும் தமிழின மொழிகளிலிருந்து சென்று கலந்துள்ளன என்று மொழி நூலார் காட்டுகின்றனர். கி.மு.1000 முதல் 800 வரை வாழ்ந்த *[1]ஹோமர் ஹெஸீயட், பிண்டார் ஆகிய கிரேக்க கவிஞர் தமிழகச் செல்வத்தைப் புகழ்ந்துள்ளனர். கி.மு. 1000 முதல் 900 வரை பாலஸ்தீனின் முதலரசராயிருந்த தாவீதும், சாலமனும், தயர் நகரின் ஃவினீசிய அரசனான ஹீரமும், தென்னாட்டு உவரிக்குக் கலங்களை அனுப்பி, முத்து, பொன், வெள்ளி, தந்தம், குரங்குகள் ஆகியவற்றைத் தருவித்தனர். சாலமன் சந்தனமும் மயிலும் தருவித்தான்.
கி.மு. 9ஆம் நூற்றாண்டு முதல் 8ஆம் நூற்றாண்டு வரை தென்னாட்டு யானைகள் அசிரியாவில் இறக்குமதி செய்யப்பட்டன. கி.மு.6 முதல் 2ஆம் நூற்றாண்டு வரை பெருக்கமுற்றது. கி.மு. 5ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட புத்த நூலாகிய பவேருசாதகம் தென்னாட்டிலிருந்து முதன் முதல், மயில் பாபிலோனுக்குச் சென்றது பற்றிய சுவையான கதை ஒன்றைக் கூறுகிறது.
தென்னாட்டு வணிகருடன் வட ஆரியர் கடல் கடந்து வாணிகம் செய்வதை ஆரிய சுமிருதி வாணரான போதாயனர் கண்டிக்கிறார். கி.மு.4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சாணக்கியர் அல்லது கௌடில்யர் தென்னாட்டு வாணிகத்தைச் சிறப்பித்துள்ளார். சிந்து கங்கைவெளி அந்நாளில் கம்பிளி, தோல், குதிரை ஆகிய மலிவான சரக்கையே அனுப்பிற்று என்றும்; ஆனால், தென்னாடு முத்து, வைரம், தங்கம் ஆகிய விலையேறிய பொருள்கள் அனுப்பிற்று என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
- ↑ 2