தென்னாடு 75
பராந்தக வீரநாராயணன் 880 முதல் இருபது ஆண்டுகளும் மாறவர்மன் இரண்டாவது இராஜசிம்மன் 900 முதல் இருபது ஆண்டுகளும் ஆட்சி செய்தனர். இவர்கள் காலத்தில் பாண்டியர் பேரரசு நிலையை இழந்து சரியலாயிற்று. 907-ல் சோழன் முதலாம் பராந்தகன் மதுரை கொண்ட சோழன் என்றும் மதுராந்தகன் என்றும் விருதுகொள்ள முடிந்தது. வேளூர்ப்போரில் இலங்கை அரசனையும் பாண்டியனையும் சோழன் ஒருங்கே முறியடித்து மதுரையைக் கைக்கொண்டான். 925 முதல் 13-ஆம் நூற்றாண்டு வரை பாண்டிய அரசு புதிதாக எழுந்த சோழ அரசின் கீழடங்கிய ஒரு சிற்றரசாயிற்று.
வடபுல அரசுகள்
தமிழகத்துக்கு வடக்கே ஆந்திரர்களுக்குப் பிறகு மிகவும் பழமையான மரபினர் வாகாடகர், மேலைக்கங்கர், கடம்பர், விஷ்ணுகுண்டின மரபினர், சாளுக்கியர், கிழக்குக் கங்கர், இராஷ்டிரகூடர் ஆகியவர்களே.
வாகாடகர்
வாகாடகர்கள் மைசூருக்கு வடகிழக்கில் பெரும்பகுதியை ஆண்டவர்கள். குந்தளம் என்று குறிக்கப்படும் பெல்லாரி சூழ்ந்த பகுதியையும் அவர்கள் கைக்கொண்டு ஆண்டதுண்டு.
மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே அவர்கள் வளர்ந்து வந்தனர். நான்காம் நூற்றாண்டில் ஆண்ட முதலாம் பிருதுவிசேனன் நாட்டைத் தென்பால் பரப்பிக் குந்தள தேசத்தைக் கைக்கொண்டான். அடுத்த அரசனாகிய இரண்டாம் உருத்திரசேனன் கங்கைவெளியை ஆண்ட இரண்டாம் சந்திரகுப்த விக்கிரமாதித்தன் புதல்வியை மணந்து கொண்டான். கி.பி. 500 உடன் இம்மரபு மேலைக் கங்கர், சாளுக்கியர் ஆகியவர்கள் ஆட்சியுள் மறைந்தது.
கடம்பர்
கடம்பர்கள் என்ற பெயர் மேற்குக்கரையில் கடற்கொள்ளையிட்ட ஒரு கூட்டத்தின் பெயராகச் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றது. அவர்கள் கி.பி.340-ல்