பிறமொழி இலக்கிய விருந்து -1
தன்று.
115
ஜெஹா: நூர்ஜஹான், இந்தக் கையெழுத்து என்னுடைய
நூர்: ஆ, உங்களுடையதன்றா?
ஜெஹா: நீ எத்தனையோ குற்றம் செய்தது உண்மை. என் கண்களில் அவை குற்றமாகப்படவில்லை. என் பிள்ளையை நீ கொன்றதை அறிவேன். அன்று குறை காணவில்லை. பேரரசி ரேவாவை இழந்தேன். அன்றும் உன்மீ உன்மீது குறைகாண முடியவில்லை. ஆகவே நானே இக் கையெழுத்தை இட்டிருக்க இயலாது என்பதை நீ உணர்வாய். ஆனால்... இந்தக் கைதான்... நீ இறுதி முத்தமீந்த இதே கைதான் கையெழுத்திட்டது. ஆனால் அது இப்போது மகபத்கானின் கை!
நூர்: மகபத்கான் நீ வென்றது இப்போதுதான்! ஆயினும் நான் வருந்தவில்லை. பேரரசை நீ எடுத்துக் கொள்ளலாம். என்னிடமிருந்தல்ல, பேரரசரிடமிருந்து. நான் அவர் பேரரசை ஆட்டிப் படைத்தேன், அவரைப் புண்படுத்தியல்ல. நான் ஒரு பெண்.பெண்மையால் அவரை, பேரரசை ஆட்டிப்படைத்தேன். நீர் இப்போது அத்துறையில் என்னை வென்றுவிட்டீர். நீர் ஆட்டிப் படைக்கிறீர். ஆயினும் பெண்மை ஆட்டிப் படைத்த போது அம்முகம் எப்படியிருந்தது? இப்போது எப்படியிருக்கிறது, பாரும். உம் வெற்றியில் நீர் மகிழலாம். என் தோல்வியில் நான் வருந்தவில்லை. நான் தோற்றேன். மகிழ்ச்சியுடன் என் கணவன் கடமையைக் காக்கச் சாவைத் தழுவுகிறேன். பேரரசரே, சாவிலும் உம்மை மறவாது செல்கிறேன், விடைதருவீர்.
ஜஹா: (உகுத்த கண்ணீருடன் அவளை அணைத்து) நீண்ட விடை வேண்டியதில்லை, பேரரசி! உன்னையடுத்துப் பேரரசரும் விரைந்து வருவது உறுதி. கடமைக்காக நீ சற்று முன் செல். காதலுக்காக நான் சற்றே பின்தங்கி வருகிறேன்.
நூர்: ஆ, தாங்கள் பேரரசர் மட்டுமன்று.என் காதற் பேரரசின் ஜோதி.(அணைத்து முகம் திருப்பிக் கொண்டு செல்கிறாள்.) ஜெஹா: மகபத்! மக:பேரரசே!
ஜெஹா:எனக்கு ஒரு வேண்டுகோள்.