உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

125

இனி எல்லாம் வீண், வெறும் பாழ்தான். ஆனால் இறுதி வரை அட்டகாசத்துடன், நிமிர்ந்த நோக்குடன், அழிவு நோக்கிச் செல், நூர்ஜஹான்!

காட்சி 34

(உதயப்பூர் ‘முகில் மாளிகை': மகபத்கான், கர்ணசிங், வானரராஜா, அவையோர், ஷாஜஹான் வரவேற்பு.) எல்லோரும்: பேரரசர் ஷாஜஹான் வாழ்க! வெல்க

பேரரசர்!

மக: பேரரசே இதோ எதிரியின் கொடி! இதோ அவர்கள் வசமிருந்த பேரரசர் மணிமுடி!

(ஷாஜஹானிடம் தருகிறான்.)

ஷா: மகபத், எனக்காக நான் வந்து சேருமுன்பே என் வேலை முழுவதையும் முடித்த உம் பதவிக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்! ஆயினும் பேரரசைக் கைக்குள் பெற்றும் வீசியெறிந்த பெருந்தகை வீரருக்குப் பரிசளிக்கும் தகுதி என்னிடம் என்ன எஞ்சியுள்ளது?

கர்ண: பேரரசே, மகபத்கானின் பணி பேரரசாள்வதன்று; பேரர சாளம் பேரரசரை ஆக்குவதே.

ஷா: நன்று சொன்னீர், ராணா! வீரரை வீரரே அறிவர். மகபத், பேரரசி வசப்பட்டுவிட்டார்களா?

மக: ஆம், அரசே?

ஷா: அரச குடும்பத்துக்கு வேண்டிய பாதுகாப்புகள் செய்து விட்டீர்களா?

வா-ரா: தக்க பாதுகாப்புகள் நானே செய்துவிட்டேன், பேரரசே!

ஷா: நீயா, பாதுகாப்பா? நாசமாய்ப் போச்சு!

வா-ரா: ஆம், அரசே. இனிக்கவலை வேண்டாம். பர்வேஜின் இரண்டு பிள்ளைகள் இறந்து விட்டார்கள். குஸ்ரூவின் பிள்ளைகளையும் நான் கொன்றுவிட்டேன். அதுமட்டுமல்ல, சஹரியாரின் இருகண்களும் குருடாக்கப்பட்டுவிட்டன.