உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




134

அப்பாத்துரையம் - 23

காமந்: ஆம். இதனால் மாதவனிடம் ஏற்படும் மாறுதல்களையும் கவனித்து வருகிறேன். சீர்பருப்பதத்தில் யோகம் பயின்று கொண்டிருக்கிறேன், என்ற மற்றொரு மாணவி கபாலகுண்டலா இப்பக்கம் அடிக்கடி வருகிறாள். அவள் சௌதாமினியிடமிருந்து செய்தி கொண்டுவந்து எனக்கு

உதவுகிறாள்.

அவலோ: அது சரி. ஆயினும் தொலைவிலிருக்கும் அவள் என்ன செய்ய முடியும்?

காமந்: அவளை நீ முற்றிலும் இப்போது அறிந்து கொள்ள மாட்டாய். அவள் என் மாணவியாயினும், என்னை விட மிகுதியான மனித இனப் பற்றும், சமூகப் பணியாற்றலும் உடையவள். பெற்றோர் தம் உறுதிமொழியைக் கூறும்போது, அவளும் என்னுடன் இருந்தாள். நீ இப்போது எங்கள் இருவர் சார்பிலும் இருந்து காதலர் இருவருக்கும் வேண்டிய தூண்டுதல் தந்து அவர்களை இயக்க வேண்டும். நாம் நடத்தும் இக்காதல் நாடகத்தின் வெற்றியைப் பொறுத்தது, பத்மாவதி, விதர்ப்பம் ஆகிய இரு நாடுகளின் வருங்கால வாழ்வு நலம்.

தாயே!

அவலோ: அப்படியே எல்லாம் கவனித்துச் செய்கிறேன்,

காட்சி 2

(முல்லைப் பூங்கா: முற்பகல்: கையில் ஒரு அட்டைப் படத்துடன் கலகம்சன் காத்திருக்கிறான், மறைவில்)

கலகம்சன்: (தனக்குள் பணியாளாக இருந்தால், என்னைப் போல் மாதவனை ஒத்த நிறைசீராளனின் பணியாளாயிருக்க

வேண்டும். என் காதலி மந்தாரிகாவுக்கு இன்று

அறநிலையத்திலேயே பணி கிடைத்தது. அறநிலையமோ என் காதலி மூலமே எனக்கு இந்த இனிய பணியைத் தந்திருக்கிறது.என் காதலை நானறியாமலே வளப்படுத்திய தலைவருக்கு. அவரறியாமலே அவர் காதலை வளப்படுத்தும் வேலை எனக்குக் கிடைத்திருக்கிறது. இந்தப் படத்தை அவர் பார்க்கட்டும். இது பேசும் காதல் மொழியில் அவர் உருகாமல் இருக்க முடியாது... இதோ மகரந்தர் வந்து விட்டார்! மணியோசை வந்துவிட்டது. இனியானை வர நேரமாகாது.