உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

145

காமந்: (தனக்குள்) இலவந்திகை திறமே திறம்! நாமே கூறவந்ததை அவள் கூற வைத்துவிடுகிறாள். (உரக்க) விதர்ப்ப நாட்டின் அமைச்சர் தேவரதனைப்பற்றி நீ கேள்விப்பட் டிருக்கலாம். அவர் வீரருள் வீரர். அறிவருள் தலைசிறந்த அறிவர். ஒப்பற்ற பண்பாளர்.

மால: ஆ, என் தந்தை அவரைப்பற்றி எவ்வளவோ பேசியிருக்கிறார்.

தோழர்களாகக்கூட

இல: ஆம். இருவரும் பள்ளித் தோழர்க

இருந்தவர்களாம்.

காமந்: மலையில் பிறந்த மாணிக்கம்போல், அவர் குடியின் புகழ் பெருக்கவந்த செல்வன்தான் என் மாதவன்.

மால: (தன்னையறியாமல்) ஆ!

இல: மாணிக்கம் மலையிற் பிறக்கிறதானால்...

அவலோ: முத்து கடலில்தானே பிறக்கும்?

(மாலைச்சங்கு கேட்கிறது)

காமந்: மாலைச்சங்கு ஊதிவிட்டது. பின் ஒரு தடவை வருகிறேன். இப்போது நாங்கள் போகிறோம்.

(காமந்தகியும் அவலோகிதாவும் மாடிப்படியிறங்கிச்

செல்கின்றனர்.)

காட்சி 5

(சிவன்கோயில் பின்பக்கத்துத் தோட்டம்: அவலோகிதாவும் அவள் தோழி புத்தரட்சிதாவும்)

புத்த: என்ன அக்கா, அறநிலையத்திலேயே உன் கால்கள் இப்போதெல்லாம் பாவமாட்டேனென்கிறதே!

அவலோ: அன்னை இப்போதெல்லாம் எனக்கு அடிக்கடி வெளியே வேலை கொடுக்கிறாள். அதனால்தான் நிலையத்தில் அடிக்கடி தங்கியிருக்க முடிகிறதில்லை.

புத்த: இப்போது எங்கே இப்பக்கம்?