உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




152

அப்பாத்துரையம் - 23

உடனே கவலை கொண்டாள். நாங்கள் தடுத்தும் கேளாமல், அவளே அவனைக் கவனித்து உணர்வு வருவித்தாள். அவன் உணர்வு பெற்றெழுந்ததும், உயிரிழந்து பெற்றவன் போல் அவள் ஆர்வத்துடன் அவனைக் கட்டியணைத்துக் கொண்டாள். புலி எப்படியோ அவள் நாணத்தைத் திரும்ப வராமல் சாகடித்து விட்டது.

காமந்: இது கேட்க நான் மகிழ்ச்சியடைகிறேன். மகரந்தன் நல்ல நேரத்தில் எப்படி வந்தான் என்பதுதான் தெரியவில்லை. (மகரந்தன், மதயந்திகா, மாதவன், மாலதி, இலவங்கிகா, புத்த ரட்சிதா ஆகிய அனைவரும் வருகின்றனர்.)

நீ எப்படிச் சரியான நேரத்தில் வந்தாய், மகர்?

மக: மாதவன் சிவன்கோயில் தோட்டத்திற்கு வருகிறானென்று கேட்டேன். அவனைப் பார்க்க விரைந்து வந்து கொண்டிருந்தேன். புலி உலாவுவது தெரியாது. ஆனால் பலர் ஓடுவது கண்டு திரும்பிப்பார்த்தேன். ஒரு பெண்ணின்மீது புலி பாய்வது கண்டு தாக்கினேன்.

மால: புலியைக் கொன்றுவிட்டார். ஆனால் இந்தமானிடம் அகப் பட்டுக் கொண்டார்.

புத்த: உன்னை நான் அவரிடம் காட்டுமுன்பே, புலி உன்னை அவரிடம் காட்டிவிட்டது, மதயி.

மக: புலி மாலதியின் காதலையும் மாதவனிடம் கொண்டு சேர்த்திருக்கிறது. இனி நண்பன் காதலில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை.

காமந்: உன் உயிர்காத்த வீரனுக்கு உன் உடல்பொருள் ஆவியைக் கொடுக்கிறாயா, மதயந்திகா!

மதய: என் மனமறிய முன்பே கொடுத்தேன். தாங்கள் அறிய இதோ உறுதி தருகிறேன்.

(மகரந்தன் கையைப்பற்றி அழுத்துகிறாள். மகரந்தன் கையில் மெள்ளக் கிள்ளுகிறாள்)

காமந்: மிக நன்று. மாலதி! மாதவன் உணர்விழந்தபோது, நீ அவனுக்கு உணர்வு வருவித்தாய். நீ இனி அவனைப்