உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

163

காமந்: விரும்பிய வினைமுறைகள் நிறைவேறத் தெய்வம் அருளு மாக! என் நண்பர்களின் செல்வங்கள் இணைந்து பயனிறைவுற்று மகிழுமாக!

மால: (தனக்குள்) நான் விரும்பும் வினைமுறை இயற்கையுடன் ஒன்றுபடுவதுதான். என் மாதவனை விட்டு என் தந்தை விருப்பப்படி நடப்பதை நான் விரும்புகின்றேனில்லை. தந்தை புண்பட மாதவனை அடைவதும் புதல்வர் கடமைக்கு அழகன்று.

இல: சர்க்கரையை நஞ்சென மயங்கி உண்ணாது மாழ்குறும் ஒருவரை ஒத்தனள் என் இளந்தலைவி.

(அமைச்சர் மாளிகைப் பணிநங்கை ஒரு தங்கப் பேழையுடன் வருகிறாள்)

பணிநங்கை: அம்மா, அமைச்சர் இதை உங்களிடம் தரும்படி அனுப்பியுள்ளார். இதில் மன்னர் அனுப்பிய மணவாடை அணிமணிகள் உள்ளன. நந்தனனை மணக்கும் மணமகள் இவற்றை அணிந்துவரக் கோரப்படுகிறாள்.

காமந்: நந்தனனை மணக்கும் மணமகள்தானே! மிக நன்று. அமைச்சர் அறிவே அறிவு. அங்ஙனமே செய்வேன் என்று அறிவி. (பணிநங்கை செல்கிறாள்.)

மால: (தனிமுகமாக) நான் வருந்தாமுன் வருந்துறும் அன்னையிடம் இன்று என் வருத்தத்தின் நிழல்கூடக் காணாதது என்னோ?

காமந்: இலவங்கிகா, நீ உன் தோழியுடன் சென்று அம்மனுக்கு வழிபாடு செய்க.

(இலவங்கிகா மாலதியை இழுத்துக்கொண்டு அம்மன் திருமுன் சென்று வழிபடுகிறாள்)

இல: என் அரசி! தாங்கள் விரும்பிய கணவனுடன் அம்மன் நீடுழி வாழ்வளித்துத் தம் காதலை நிறைவுபடுத்த வேண்டுமென்று வணங்குவீராக.

மால: நீயும் ஏன் இந்த நாடகம் நடிக்கிறாய், இலவூ? நான் விரும்புவது இப்போது கணவனுடன் இணைவதன்று. இயற்கை