உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

165

மாத: (தனக்குள்) ஆகா, அன்னை நாடகத்தினால் எனக்கு ஏற்பட்ட துன்பக் காற்று என் மாலதியின் உள்ளத்தில் மலை போன்ற அலைகளை எழுப்பி அதன் ஆழ்ந்தடங்களைக் காட்டி என்னை எல்லையிலா மகிழ்ச்சியுள் ஆழ்ந்தடங்குகிறது. ஆனால் அவள் துயர் எனக்கு இனி தெனினும் அதனை நீடிக்க என்னால் முடியாது. (உரத்து) அப்படியே செய்கிறேன், மாலதி. எழுந்து என்னைத் தழுவிக்கொள்.

மால:

(வியப்புடன்) ஆ, என் இலவங்கிகாவின் பெருந்தன்மையே பெருந்தன்மை. (எழுந்து அணைத்துக் கொண்டு) என் கண்களில் ஒழுகும் கண்ணீரினால் என் வடிவைக்கூடக் காண முடியவில்லை. என் உள்ளத்தில் அவரே நிறைந்திருப்பதனால் தானோ என்னவோ, என்னை அணைக்கும் போதுகூட அவரையை அணைப்பதாகத் தோன்றுகிறது. இந்த எண்ணத் துடனேயே என் உயிர் பிரியட்டும்.

மாத: (அவள் கண்ணைத் துடைத்து) இதோ பார் நீ அணைத்துக் கொண்டது இலவங்கிகாவை அல்ல, என்னைத் தான். உன் உயிர் பிரியவேண்டாம். என்னிடமே ஒன்று படட்டும். (மாலதி விழிக்கிறாள்.)

காமந்: கண்மணி, ஒன்றும் தவறிவிடவில்லை. நீ விரும்பிய காதலனையே நீ மணந்துகொள்ளவிருக்கிறாய். அதற்காகத்தான் உன்னை இங்கே வரவழைத்திருக்கிறேன்.

மால: அது எப்படி முடியும் அம்மணி?

காமந்: அதை என்னிடம் விட்டுவிடு. மாதவனுடன் நீயும் புத்த ரட்சிதாவும் சென்று என் நிலைமையைச் சொல்லுங்கள். உங்கள் மணவினை அங்கு நடைபெற ஏற்பாடு செய்திருக்கிறேன்.

மால:(வியப்புடன் ஒன்றும் புரியாமல்) அந்தோ, தந்தையின் ஏற்பாடுகள் என்ன ஆகும்? அவர் அவமதிக்கப்பட்டால், உயிர் தாங்க மாட்டாரே!

காமந்: அவர் உன் தந்தை மட்டுமா? என் நண்பரல்லவா? நான் பார்த்துக்கொள்கிறேன். (மகரந்தனை நோக்கி) குழந்தாய் மகரந்தா, நீ, எங்கள் பள்ளியில் ஒருநாள் பெண் வேடமிட்டிருக் கிறாயே, நினைவிருக்கிறதா?