170
அப்பாத்துரையம் - 23
புத்த: ஆம். ஆனால் நிலைமை அவ்வளவு மோசமில்லை. நான் காலையில் இலவங்கிகாவைப் பார்த்துவிட்டுத்தான் வந்தேன். நம் புதிய மாலதி பழைய மாலதியைவிட நன்றாகவே நடித்துள்ளாள்.
அவலோ: என்ன செய்தி?
புத்த: அவள் நாணம் என்னும் கோட்டையில் தன்னைக் காத்துக் கொண்டாள். நந்தனன் பணிந்தானாம், கெஞ்சினானாம். அவள் பிடிவாதம் செய்தாள். அதன்பின் அவனும் முரடனாகத் தோற்றமளித்தான். அதன்பின் போர்த்த போர்வைக்குள்ளிருந்தே அவள் கால்கள் அவனை உதைத்தனவாம்!
அவலோ : ஐயோ, காரியம் கெட்டுப்போய்விட்டிருக்குமே. புத்த: இல்லை, மாதவனிடம் அவளுக்குள்ள பாசத்தை அவன் கேள்விப்பட்டிருக்கிறான். பிடிவாதத்தின் காரணம் அது என்று அவன் சீறிச் சென்றான். “உன்னை இனி என் வீட்டில் ஏறாமல் விரட்டுகிறேன், பார்" என்று உறுமிக் கொண்டு போனானாம். அப்பொழுதும் அவள் “நான் போகப் போவதில்லை” என்று பெண் குரலிலேயே கூறினாளாம்!
அவலோ: ஆகா, மிக நன்று, மிக நன்று. ஆனால் இனி நடப்பது என்ன?
புத்த: நடப்பதென்ன? எல்லாம் தான் நடத்தியாயிற்று. மதயந்திகா இரவெல்லாம் கனவுகண்டாளாம். மகரந்தன் புலிநகத் தழும்பு பட்ட மார்பின்மீது தான் கவலையற்றுச் சாய்ந்து கிடந்ததாக அவள் கனவு கண்டு, விழித்ததும் ஏமாற்றத்துடன் புலம்பினாள்.நான் அவளிடம் சென்று அண்ணன் புதுமனையின் கோலாகலங்களைக் கூறினேன். அவள் நாத்தியை அமைதிப் படுத்தச் சென்று, அவள் அணைப்பில் யாவும் மறந்தாள். தனால் மகரந்தனும் அவளும் தனிப்பட்ட காதல் மணத்துக்கு இசைந் தனர்.
அவலோ: சரி, நந்தனன் கோபத்துக்கு என்ன செய்வது?
புத்த: பெண் நினைத்தால் முடியாதது என்ன இருக்கிறது, அதுவும் காதல் அம்பேறுண்ட பெண் நினைத்தால்! மகரந்தனுக் காக, மதயந்திகா தன் தமையனை அமைதிப்படுத்தி வழிக்குக் கொண்டுவர ஒப்புக்கொண்டாள்.