உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 23

176 || அலைகிறார்கள். மன்னனும் அமைச்சர் பூரிவசுவும் நந்தனனும் ஊர் ஊராக, காடு மேடாக ஆள் விட்டும் நேரிலும் தேடுகின்றனர். என் குழந்தைகள் யாவும் தாயின்றித் துடிக்கும் கன்றுகள் போலக் கரைகின்றன.நான் இனி என்ன செய்வேன்?

அவலோ: அம்மா, தாயாகிய தாங்களே கவலைப்பட்டால், நாங்கள் என்ன செய்யக்கூடும்? ஆனாலும் எனக்கு இன்னும் ஒரே ஒரு நம்பிக்கை இருக்கிறது. தங்கள் பழைய மாணவியான கபாலகுண்டலாவின் வேலைதான் இது என்பதில் ஐயமில்லை. அவளை வெல்ல வல்லவள் சௌதாமினி ஒருத்திதான். தாங்கள் அவளுக்கு முழு விவரமும், தங்கள் ஐயமும் தெரிவித்து எழுதியிருக்கிறீர்கள். அவள் ஒருத்தி முயற்சியில்தான் இன்னும் நம்பிக்கைக்கு இடமுண்டு.

திரைக்குப் பின் ஒரு குரல்: ஆம். இடமுண்டு.

(அனைவரும் அப்பக்கம் நோக்குகின்றனர். திரை விலகுகிறது. சௌதாமினி கையில் மாலதியைப் பிடித்துக் கொண்டு முன்வருகிறாள். அனைவர் உடலிலும் உயிர் வருகிறது.)

காமந்: ஆ சௌதாமினி! ஆ, மாலதி!

சௌதா: அன்னையே, தாங்கள்கூட இவ்வளவு கவலைப் பட்டு விட்டீர்கள். தங்கள் கடிதம் வந்ததும் கபால குண் லாவைத் தேடினேன். அவள் அகப்படுவது அரிதாயிருந்தது. கடைசியில் அவளைக் கண்டு பிடித்தும் உண்மை கூற மறுத்தாள். இறுதியில் நானும் நயத்தை விட்டுப் பயமுறுத்த தொடங்கினேன். நான் என்றும் யாரிடமும் சீற்றங் கொள்வ தில்லை.ஆனால் சீற்றங் கொண்டால், அச்சீற்றத்தின் ஆற்றலை அவள் நன்கு அறிவாள். ஆகவே அவள் நடுநடுங்கினாள். அதன்பின் அகோர கண்டருக்கும் தெரியாத யோக வித்தைகளைக் கற்றுக் கொடுப்பதாக நான் அவளுக்கு ஆசை காட்டினேன். இங்ஙனமாக, இறுதியில் அவளை வென்றேன். மாலதியை இவ்வகையில் மீட்டபின் தங்களைக் காண ஓடோடி வந்தேன்.

அவலோ: அன்னைக்கு அடுத்தபடி நீயே எங்கள் புதிய

அன்னை, சௌதா.