உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 23

(206 | கண்ணீருக்கு ஒரு முடிவு கட்டியது. பலர் கருத்துரைகள் பகர்ந்தாலும் சிங்சேனின் திட்டமே ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பின்புறத் தோட்டத்தில் ஆழ்ந்து நீண்ட குழியொன்று தோண்டப்பட்டது. அதன் அடித்தளத்தில் சுண்ணாம்புத் தூளை நன்கு அறையவிட்டு, அதன் பின் உடலைக் கழுவி, நெய்யும் மணப்பொருளும் மலரும் இட்டு, ஒப்பனை செய்து இறக்கி, மேலும் சுண்ணாம்பு தூளிட்டு மூடினர். இறுதியில் மண்ணிட்டு நிலம் சமதளமாக்கப்பட்டது.

பெண்ணாடையுடனே, கன்னித் துறவிக் கோலத்திலேயே கல்லறை எதுவுமின்றி தாச்சிங் உடல் மண்ணுள் கிடந்தது.

தாச்சிங் போனநாள் முதல் திருமதி ஹோ தாச்சிங் கணவன் இன்னு வருவான், நாளை வருவான் என்று நாட்கணக்கில் காத்திருந்தாள். மாதங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மறைந்தும் செய்தி எதுவும் தெரியவில்லை. தன் ஆட்களை எங்கும் சென்று தேடவிடுத்தும் பயனில்லை. மேலும் தாச்சிங்கின் நில உடைமைகள் பார்ப்பாரில்லாமல் பாழடைந்து வந்தன. இறுதியில் திருமதி ஹோ தாச்சிங் தனது துயர வாழ்வை விடுத்துத் தானே சென்று மேற்பார்வையிட்டாள். அப்போது வேலையாட்களுள் ஒருவன் தன் கணவின் முத்துமாலையை அணிந்திருப்பது கண்டு திகைத்தாள். அவனிடம் அதை வாங்கி, “இதை நான் உடைத்துப் பார்க்க விரும்புகிறேன்.உனக்குற்ற விலை தருகிறேன்” என்றான்.

அவன் ஒப்பு கொள்ளவே அதை உடைத்துப் பார்ததாள். அதனுள்ளிருந்து முத்துக்கள் தெறித்தன. பின் அவள் தன் அரை மேகலைஞானையும் உடைத்தாள். அதிலும் அதே முத்துக்கள் தெறித்தன. அது கண்டு வியந்த வேலையாளிடம் அவள் “இது என் கணவன் அணிந்திருந்த முத்துமாலை. இரண்டிலும் ஒரே வகை முத்து இட்டுச் செய்யப்பட்டிருந்தது. இது உனக்கு எப்படிக் கிடைத்தது?” என்று கேட்டாள். அவன் தான் ஃவெய்குங் கன்னி மாடத்தில் வேலை செய்யச் சென்று மேல் முகட்டைச் சீர்திருத்தும் போது அங்கே அகப்பட்டதென்று கூறினான்.

அகப்பட்ட இந்தத் துப்பை விளக்க அவள் விரும்பினாள். ஆகவே 'குவே' என்ற அந்த வேலையாளுக்குப் பொருள்