உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(218

அப்பாத்துரையம் - 23

இரவு மூன்றாவது யாமம் இருக்கும். எத்தகைய அரவமும் இல்லை. எல்லோரும் உறங்கிவிட்டார்கள் என்று நினைத்துத் தோஃபு தன் அரைஞாணை உத்தரத்திலிட்டுக் கட்டி, அதில் தன்னைச் சுருக்கிட்டுக் கொண்டாள்.

ஆனால் தோஃபு நினைத்த மாதிரி எல்லோரும் உறங்கி விட்டார்களானாலும், அவள் தந்தை மட்டும் ஏதோ கனாக்கண்டு விழிததிருந்தார். மகள் அறையிலிருந்து அரவம் வருவது கேட்டு மனைவியை எழுப்பினார். அவள் “தூங்குகிற பிள்ளை குறட்டை விடுகிறது. நீங்கள் வேண்டுமென்றால் போய்ப் பாருங்கள்” என்று கூறிவிட்டாள்.தந்தை சென்றபோது கதவு தாழிடப்பட்டிருந்தது. தட்டியும் ஓசையில்லை. உடனே அவர் காலாலுதைத்துக் கதவைத் தள்ளி உட்சென்றார். மகள் நிலை கண்டு அவர் கூக்குரலிட்டார். தாயும் உடனே எழுந்து ஓடிவந்தாள். சுருக்கு உடனே அவிழ்க்கப் பட்டது. பெருமுயற்சியின் பின் தோஃபு உயிர்வாதையிலிருந்து மீண்டாள்.

ஆனால் மீண்டதும் அவள் பெற்றோரிடம் "என்னை ஏன் மீண்டும் பிழைக்க வைத்தீர்கள்? நான் இனி வாழப் போவதில்லை” என்று தேம்பினாள். அவர்கள் “அம்மா, உன் மனப்படியே இனி நடப்போம். அதற்காக நீ சாக வேண்டாம்" என்ற உறுதி கூறியபின்பே அவள் அமைந்திருந்தாள்.

மகள் உடல் தேற அவளுக்கு அமைதி மட்டும் போதாது. அவள் மனத்தில் ஐயம் முற்றும் அகன்றாக வேண்டும். அவள் மணஉறுதிக்கு இனித் தடை ஏற்படாத வண்ணம் உறுதிப் படுத்தும் செயல் மணவினையே தவிர வேறில்லை என்று எண்ணித் திரு.சூ தம் மனைவியுடன் இதுபற்றிக் கலந்து முடிவு செய்தார். அது கேட்டது முதல் தோஃபு முகம் முற்றிலும் களை பெற்றது. திரு. சூ. வாங்கிடம் சென்று மணவினைத் தூது செல்லும்படிக் கோரினார். ணைக்கும் வேலைக்கு நான் என்றும் தயங்கேன்' என்றனர். அகமுக மகிழ்வுடன் சென்றார். அவர் முடிவுக்குத் தோஷுவின் பெற்றோரும் இணங்கியதுடன் அவனையும் ணங்கச் செய்தனர். முதலில் தோஷுவின் பெற்றோரும் இணங்கியதுடன் அவனையும் இணங்கச் செய்தனர். முதலில் தோஷு சிறிது தயங்கினாலும், தோஃபு தன் பாட்டுக்கு எதிர்ப்பாட்டாக எழுதிய வரிகளைக் கண்ணுற்றதும்