பிறமொழி இலக்கிய விருந்து -1
219
அவள் வேறு வகையில் அமையவே மாட்டாள் என்றறிந்து ணங்கினான்.
ஊரார் புகழ, பொறுப்பற்ற பலர் தொழு நோயாளியை காதலித்த பெண்ணின் புதுப் பித்துப்பற்றிக் கேலிச் சிந்துகளைப் பாட, இரு குடும்பத் தினரும் ஒத்து மணவினை நடந்தேறியது.
ஆண்டுகள் இரண்டு கழிந்தன. தோஃபு தன் கணவனுக்குப் பணிவிடையிலும் ஆதரவிலும் ஒப்பற்ற செவிலியாய் விளங்கினாள். ஆனால் மனைவியான பின்னும் தோஷு அவ்விளம் பெண்ணின் உடல் தீண்டத் துணியவில்லை. தான் இறப்பது உறுதி; அவள் தொழுப்பிணியாளனின் மனைவி என்று வெறுத்தொதுக்கப்படாது மறுமணம் செய்யும் அளவில் கன்னியாகவே இருக்கட்டும் என்று மனங் கனிந்தான். இறக்கப்போகும் தறுவாயில் இதனைத் தாய் தந்தையர் அறியக் கூறிச்செல்லவே அவன் உறுதியுடனிருந்தான். தோஃபுவும் கணவன் குறிப்பின்வழி நின்றதன்றி அவன் மனங்கலைக்க ஒருப்படவில்லை.
ஒவ்வொரு நாளும் நாம் நாளை இறந்து விடுவோம். அடுத்த வாரம் இறந்துவிடுவோம் என்று தோஷு ஆவலுடன் சாவை எதிர்பார்த்து வந்தான். ஆனால் அவன் எதிர்பார்த்த 'சாவென்னும் சோலைவனம்' அணுகவில்லை. 'வாழ்வென்னும் பாலைவனம்' நீண்டு நீண்டு சென்றது. தன்னுடன் பிணைக்கப்பட்டிருக்கும் காரிகையின் நல்வாழ்வுக்கான விடுதலை நாளை இன்னும் நீட்டிப்போட அவன் விரும்பவில்லை. ஆகவே மூன்றாண்டு சென்ற பின் அவன் 'நான் என்று சாவேன்' என்று ஒரு சோதிடனிடம் வினவினான்.
சோதிடன் கணித்துக் கணித்துப் பார்த்து, இறுதியில் பதின்மூன்று வயது முதல் இருபத்து மூன்று வயதுவரை சாதகனுக்குப் பெருநோய் இருக்குமென்றும், அதன்பின் முப்பத்துமூன்று வரை இன்னும் பல வகைப்பட்ட துன்பம் தொடருமென்றும் அதன் முடிவில் முப்பத்து மூன்றாம் ஆண்டில் அவன் இறப்பான் என்றும் கூறினான். முப்பத்தி மூன்றில் சாவதுபற்றித் தோஷூவுக்குக் கவலையில்லை. அடுத்த பத்து ஆண்டுகள் இன்னும் துயரடைந்து மனைவியாக வாழத் துணிந்த பெண்ணின் நல்வாழ்வுக்கு இடையூறாக இருக்க வேண்டுமே