உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(220

அப்பாத்துரையம் - 23

என்று வருந்தினான். எப்படியும் சோதிடத்தையும் தன் உறுதியால் எதிர்த்து மாளத் துணிந்து விட்டான்.

மனைவியிடம் அவன் “நங்கையே, என்னை மணக்குமுன் இரு தடவை உனக்கு விடுதலை பெற வாய்ப்புத் தந்தேன். ஏனோ மறுத்தாய்? உன் உள்ளம் கருணையுள்ளம். பெருந்தன்மையுள்ளம். பேருள்ளம். ஆனால் நான் கல் நெஞ்சனாயில்லையே! மூன்றாண்டுகளாக நீ என் மனைவியாக வாழ்ந்தும் நான் உன்னைத் தீண்டவில்லை. நீ இன்னுங் கன்னியே என்பதை உன்னிப்பார். என் தாய் தந்தையரும் இதையறிவர். ஆகவே நீ இனிச் செய்யும் மணம் மறுமணமன்று; புதுமணமாக, திருமணமாகவே இருக்கும்" என்றான்.

அவள் கண்ணீர் உகுத்தாள்.

"மணம் உடலுக்கல்ல, உயிருக்கு அன்பரே!"

“நீ எனக்காக மிகப் பெருந் தியாகமியற்றியுள்ளாய். மாபெருந் தியாகம் செய்து கொண்டும் வருகிறாய். ஆனால் நான் அதற்குத் தகுதியற்றவன். இவ்வளவு தியாகத்துக்கு எந்தக் கணவனும் தகுதியற்ற வனே. இதற்கு இறைவன்தான் ஏற்ற பலன் வழங்க முடியும்”

“அன்பரே, கணவன் மனைவியர் இத்தகைய செய்திகளி லெல்லாம் மனம்விட்டுப் பேசக்கூடாது" என்று அவள் தாய் பிள்ளையைக் கடிவது போலக் கடிந்துரைத்து விட்டு அப்பால் சென்றுவிட்டாள். மறுநாள் காலை அவன் குடிக்கத் தேறல் கொண்டுவரும்படி மனைவியைக் கோரினான். அவளிடம் அவன் வேறு ஒன்றும் கூறவில்லையாயினும் முந்திய இரவு முதல் அவன் செயலையும் சொல்லையும் அவள் கூர்ந்து கவனித்தே வந்தாள். அவன் திட்டத்தை எதிர்பார்த்து அவளும் திட்டமிட்டிருந்தாள். ஆகவே “ஏன் இன்று புதிதாகத் தேறல் கேட்கீறீர்கள்?” என்று கேட்டாள்.

"மனதுக்குக் கிளர்ச்சியில்லை. ஒரு கெண்டி தேறல் வெதுப்பித் தருவாயா?" என்றான் மீண்டும் அவன்.

தேறல் கொண்டுவரப்பட்டது.சிறு கிண்ணிகளும் அருகில் வைக்கப் பட்டன. "எனக்குப் பெரிய கிண்ணி வேண்டும். அம்மாவிடம் சென்று வாங்கி வா” என்றான் தோஷ.