(230
அப்பாத்துரையம் - 23
திருமதி பீச் : எனக்கென்னவோ, அவள் காதல் கொள்ளத் தொடங்கிவிட்டால், என்ன செய்வதென்று தெரியவில்லை.
திரு.பீச் : (சிரித்துக்கொண்டு) அட பைத்தியமே, காதலிக்க வேண்டியவர்கள் யவர்கள் பெண்களல்ல, ஆண்கள். அத்தகைய ஆண்களை நான் கவனித்துக் காசு பறித்துக்கொள்கிறேன். உனக்குக் கவலைவேண்டாம்.
திருமதி பீச்: நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. அவள் பெரிய இடத்துப் பெண்கள் போல திருமணத்திலிறங்கிவிட்டால், என்ன செய்வது?
பெண்களெல்லாம்
திரு.பீச்: பெரிய இடத்துப் பணப்பையைப் பார்த்துத்தான் காதலிலேயே இறங்குவார்கள். அப்படி வந்தால், அவள் கணவனுக்கு அவள் விரைவில் வாரிசாகும்படி நான் பார்த்துக் கொள்கிறேன். அதுவரையில் மணப்பேச்சு வேண்டாம். காதல்மட்டும் நடக்கட்டும், அத்துடன் காரியத்தில் கருத்து இருக்கட்டும்.
(போகிறான்)
திருமதி பீச்: (தனக்குள்) பெண்கள் காரியமே என் கணவன் போன்ற காசாசை பிடித்தவர்களுக்குத் தெரியவில்லை என்று நினைத்துவிடுகிறார் கள். பெரிய இடத்துப் பெண்களைப்போல, பாலியும் மணம் செய்து கொண்டால் என்ன? அதற்குப் பின்னும் வேண்டுமானால் காதல் வாழ்வு வாழட்டுமே!
(ஃவில்ச் வருகிறான்)
வா,ஃவில்ச்! நீதான் என் மனதுக்குகந்த பையன்! உன்னைத்தான் என் ஆண்மகனாகத் தெரிந்துகொள்ள எண்ணியிருக்கிறேன். வா, என் அருகே வா.
ஃவில்ச்: ஏனம்மணி! (தனக்குள்) ஏது. வலை பெரிதாயிருக் கிறதே. ஏதோ பெரிய காரியம் ஆகவேண்டும்போல் இருக்கிறது!
திருமதி பீச்: நான் உன்னிடம் பாசமாயிருக்கிறேன். நீ என்னமோ பாராமுகமாக இருக்கிறாயே. உன்னை நல்ல டங்களுக்கு அனுப்பித் தொழிலில் பழக்குகிறேன்- அத்துடன் கொலைமரம் உன்னை அண்டாமல், அப்பாவிடம் சொல்லி வைத்துக் காத்துவருகிறேன். அதிருக்கட்டும், நீ..