பிறமொழி இலக்கிய விருந்து -1
231
ஃவில்ச்: (தனக்குள்) ஆ, காரியம் தலை நீட்டிக்கொண்டு வருகிறது, இப்போதுதான்! விழிப்பாயிருக்கவேண்டும்!
திருமதி பீச்: நீ மாக்ஹீத்தை அடிக்கடி பார்க்கிறாயே! பாலி அவருடன் எப்படிபழகுகிறாள்?
ஃவில்ச்: ஒரு குடும்பப் பெண் ஆணுடன் பழகுவது போலத்தான் பழகுகிறாள்.
திருமதி பீச்: ஏண்டா, நன்றிகெட்ட பயலே! நான் கேட்பதென்ன, நீ பசப்புவதென்ன?
ஃவில்ச்: நான் சொல்லமுடியாதம்மா! செல்வி பாலியிடம் சொல்ல மாட்டேனென்று உறுதி கூறியிருக்கிறேன்.
திருமதி பீச்: என்னிடம் நீ உண்மையாய் இருக்க வேண்டாமா?
ஃவில்ச்: செல்வி பாலியிடம் உண்மையாயிருப்பதைக் கெடுத்தா? மேலும் சொல்லிவிட்டு நான் செல்வி பாலியிடம் படாதபாடு படவேண்டும்.
திருமதி பீச்: வா, என் அறைக்கு வந்து சொல்லு. திரு, பீச்ச முக்குக்கூடத் தெரியாமல், எனக்கென்று நான் வைத்திருக்கும் உயர்ந்த வகுப்புத் தேறல் ஒரு கிண்ணி தருகிறேன். உண்மையை ஒளியாமல் சொல்லு.
ஃவில்ச்: ஆகா, தேறல் தந்தால், கூறுகிறேன்.
திருமதி பீச்: சரி, வா, உள்ளே போய்விடுவோம். பாலி இதோ வருகிறாள், அவள் வருமுன் போய்விடுவோம்.
(போகிறார்கள். பாலி பாடிக்கொண்டே வருகிறாள்)
பாலி:
(பாட்டு)
கன்னியர்களே- உலகில் நன் மலர்களே!
எழி லார்ந்த பொழி லிடையே வன்ன மலர் உண்டு;
(கன்)