உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(248

அழகு மின்பமு நுகர்வதற்கே,

அமைந்ததிவ் இளமை நல்வேளை!

அப்பாத்துரையம் - 23

(ஆடற்பாடல்)

(அழ)

அழகது இன்பம் பகர்வதற்கே,

அவ்வின்பம் அழகை நுகர்வதற்கே!

இன்பமே அழகின் கடமையே

இன்பமில் அழகு மடமையே!

(அழ)

அழகுள்ள போது இன்ப நுகர்வோம்!

மலருள்ள போது மண நுகர்வோம்!

அழகும் மணமும் ஒருகணமே!

மலரும் இளமையும் ஒருமணமே!

நாளை என்பதை நம்பாதீர்,

(அழ)

இன்றே குடித்தாடி விளையாடுவீர்!

வேளையில் வரும்வேள் மதன்கணையே!

வேகத்தில் சென்றிடும் அதன் துணையே!

(அழ)

நாளை என்பதை நம்பாதீர்,

இன்றே குடித்தாடி விளையாடுவீர்!

வேளையில் வரும்வேள் மதன்கணையே!

வேகத்தில் சென்றிடும் அதன் துணையே!

(அழ)

காளையர், கன்னியர் கருத்திற்கொண்டு

களித்தாடுவீர் கைகள் கோத்துக்கொண்டு:

“வேளை யகன்றிடில் மீளாது

வேதனை வந்திடும் தாளாது"

(அழ)

மாக்: உயிர்த் தோழியரே, ஆடியது போதும், அமர்ந்து கலம் அயருங்கள். சீமாட்டிகள் யாராவது கடுந் தேறல் விரும்பினாலும் பருகலாம். அதற்கும் அட்டியில்லை.

ஏன்

ஜென்னி: என்னைப் பார்த்துக்கொண்டே சொல்கிறாய், மாக்! நான் கடுந் தேறலை சாப்பிடுவதில்லையே. ஒவ்வொரு சமயம் வாத சூலைக்காக அதைக் கொள்வதுண்டு. ஆனால் அது எனக்குப் பிடிக்காது.

ரு