264
|--
பாலி:மாட்டேன், மாட்டேன்.
(பாட்டு)
காதலர் பிணைப்பில் ஒருமுடிப்பே
காசினி பெயர்த்திடா ஒருபிடிப்பே!
பெற்றோர் எதிர்த்து வந்தாலும்
பிணைப்பில் முடிப்புத் தளராதே
ஆரா அரரா அரராரா
லாரா லாரரா லலராரா!
அப்பாத்துரையம் - 23
(காத)
(காத)
(காத)
(மாக் ஹீத்தைப் பாலி பற்ற, திரு.பீச்சம் அவரை இழுக்க, சிறிது நேரப் போராட்டத்துக்குப்பின் பாலியை உடன்கொண்டு திரு. பீச்சம் செல்கிறார்)
மாக்: (நெடுமூச்சு விட்டு) லூஸி, என் கண்மணி! பெண்ணென்றால் பேயும் இரங்குமல்லவா? அவள் தகுதிக்கேற்ப அவளைக் கண்முன்னே நடத்த எனக்கு மன உறுதி போதவில்லை. அதற்கு நான் வருந்துகிறேன்.
லூஸி: அன்பரே, நான் உம் மனநிலை சிறிதும் புரியாமல் திண்டாடிப் போனேன்.
மாக்: அதனால்தான்
நீ உணர்ச்சி வேகத்தில் சிந்தனையற்றாய். நான் அவளை மணந்திருந்தால் அவள் தந்தையே என்னைத் தூக்கு மரத்துக்குக் கொண்டுவந்திருப்பாரா?
லூஸி:(ஐயந்தீர்ந்து கலக்கம் தெளிந்து) ஆ, இப்போது நான் மகிழ்ச்சியடைந்தேன். எனக்கு வேண்டுவது திருமணத்தின் கடமையல்ல. என் அன்பனின் உள்ளம் மட்டுமே. நீங்கள் தூக்குமரத்தில் தொங்குவதைக்கூட என்னால் பார்த்திருக்க முடியும். இன் னாருத்தி அணைப்பில் உம்மைக் காணப் பொறுக்கமாட்டேன்.
மாக்: அப்படியானால் இரண்டு வகையிலும் நீ திருப்தியடையப் போகிறாய்.
லூஸி: இல்லை. ஒருநாளும் இல்லை. இனி உம்மைத் தூக்கு மேடையிலிருந்து தடுக்காமலிருக்கமாட்டேன். உம் உயிரை நான்