(176)
66
அப்பாத்துரையம் - 24
‘அடே, நீ வயது வராத சிறுவன். என் இணக்க மில்லாமல் அவள் உன் மனைவியாக முடியாது.
"நாங்கள் வயது வரும்வரைக் காத்திருக்க முடியும். அதுமட்டுமல்ல. நான் மண இணக்கம் கோரப்போவது உம்மிடமல்ல, என் தந்தையிடம், அத்தகுதி உமக்குக் கிடையாது.'
அத்தையின் வாய் துடிதுடித்துக்கொண்டிருந்தது. எதிர்த்துப் பேச வாயெடுத்தவள் அப்போது அங்கே வேறோர் உருவத்தைக் கண்ட கிலியினால் அப்படியே கல்லாய்ச் சமைந்து போய்விட்டாள்!
மகளைப் பின்பற்றி லாட்கின் தன் வாதக்காலையும் பொருட்படுத்தாது வந்து நின்றார். “மகளே, நான் திருடன். நீ திருடன் மகள். இவர்கள் எல்லாம் புண்ணியாத்மாக்கள். அதோ (டேவிட்டைக் காட்டி) அவனும் புண்ணியாத்மா வீட்டான் தான். ஆகவே நாம் இங்கே வரக்கூடாது. ஆனால் நானும் இந்தப் புண்ணியாத்மாவும் திருடின பொருள்கள் இந்த வீட்டிலுண்டு. அதில் இயேசு சிலையும் ஒன்று அதோ இருக்கிறது. அந்தச் சிலை நம் எல்லோரது குற்றத்தையும் மன்னிக்கட்டும்" என்று மகளை அழைத்தேகினார்.
இவ்வுருக்கமான காட்சி கண்டு ஒரு நொடியில் தந்தையின் மனம் மாறிற்று. "உமக்கு மீளாத் தீங்கு செய்தேன். உமக்கு மீளாத் தீங்கு செய்தேன்" என்று அவர் முனகினார்.
தி
லாட்கின் மறுநாளே உயிர் நீத்தார். ஆனால் அவர் இறுதி விழாவுக்கு முன் நாங்கள் நெடுநாள் எதிர்பார்த்த என் சிற்றப்பா யெகோர் திடீரென வந்து சேர்ந்தார். அவர் போதிய பணத்துடன் வந்திருக்கவேண்டும். ஏனெனில் அவர் லாட்கினின் அடக்கச் செலவை ஏற்று அவர் குடும்பத்தைத் தன் குடும்பமாக்கிக் கொண்டார்.
முன்னறிவிப்புக்கடிதமெதுவும் போடாமல் சிற்றப்பா வந்ததால், அவரை வரவேற்கத் திடீரென்று எப்படி ஏற்பாடு செய்வது என்று அத்தையும் தந்தையும் மயங்கினர். ஆனால் அவர் எங்கள் வீட்டுக்கு வராமல் லாட்கின் வீட்டிலேயே இருந்து விட்டார். மேலும் ரயாஸானை விட்டு டேவிடுடன் மாஸ்கோவுக்கே சென்றுவிடப் போவதாக அவர் சொல்லி