238
அப்பாத்துரையம் - 24
அஸாகே துயர் கண்டு மியூகியும் அழுதாள். மியூகி அழுவதைக் கண்டு தோழியின் துயர் மீண்டும் பீறிட்டெழுந்தது. அவள் தன் அழுகையை நிறுத்த வழிதெரியாமல் வாய்விட்டுக் கதறிக் கதறி அழுதாள். பிறகு ஒருவர்க்கொருவர் ஒருவாறு ஆறுதல் கூறித் தேற்றிக் கொண்டனர். ஒருநாள் பொழுதும் ஓடி மறைந்துவிட்டது. அஸாகே தான் மியூகியைத் தேடியலைந்த கதையைக் கூறினாள்; மியூகி தன் துயர்களையெல்லாம் ஒளிக்காமல் தன் தோழியிடம் கூற அஸாகே, “அம்மணி, நம் துன்பங்களுக்கு விரைவில் விடிவு ஏற்பட்டுவிடும். என் தந்தை சாமுரோபி உன் தந்தைக்கு மிகவும் வேண்டியவர். அவர் இப்பக்கம் அருகாமையில்தான் இருக்கிறார். அவரை உசாவி அறிந்து கொண்டால், அவர் உங்களைக் கட்டாயம் அஸோஜிரோ விடம் கொண்டு போய்ச் சேர்ப்பார். உங்கள் உடல் நலமடையட்டும். நாம் சென்று அவரைக் காண்போம்” என்று மியூகிக்கு ஆறுதல் கூறினாள்.
துணையற்ற மியூகிக்கு இறுதியில் வந்த அஸாகேயின் துணையும் நீண்ட நாள் நிலைத்து நிற்கவில்லை. ஒரு நாள் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கையில், முன் அவளை விலைக்கு வாங்கிச் சென்றிருந்த விடுதி வணிகன் அந்த வழியாக வந்தான். அவன் மியூகியை அவளது உருமாறிய நிலையிலும் அடையாளம் கண்டு கொண்டான். அறத்தாயியின் ஆதரவில் அவள் அப்போது இல்லாததால் விலைதராமலே அவளைக் கைப்பற்றிச் செல்லுவதென்று முடிவும் செய்துவிட்டான். வணிகன் அவளை அணுகி வலுக்கட்டாயமாக
ழுத்துக்
கொண்டு போக எண்ணியபோது அஸாகே குறுக்கிட்டு, “அவள் என் தோழி, அவளை விடு” என்றாள். அஸாகே ஒரு பெண்தானே என்ற எண்ணத்தில் அவ்வெறியன் அவளை அசட்டை செய்து விட்டு, மியூகியை மீண்டும் பற்றி இழுத்தான். அது காணப்பொறாத அஸாகே தன் உடைவாளை உருவி அவனைத் தாக்கினாள்.
மியூகியிடம் அஸாகேக்கு இருந்த பற்று அவள் கைக்குப் பெருத்த வலுவளித்து, நீண்ட நேரம் அந்த மனித மிருகத்தினிடம் அவள் போராடினாள். அவள் உடலெல்லாம் காயமடைந்து, குருதி பீறிட்டது. ஆயினும் அவள் கை ஓயவில்லை. குட்டியைக்