34
அப்பாத்துரையம் - 24
காண்டு எனக்கெதிராக நடப்பானேன்?" என்றார். அவன் உடனே சென்று வேறு சிறிய வீடமர்த்தினான்.
ய
மாமன்
சுகதாவின் தன்மதிப்பும் இத்தடவை புண்பட்டது. அவள் இத்தடவை கணவனை அடக்கி இயக்கவில்லை. நேர் மாறாக அவனை ஊக்கி அவனுடன் வெளியேறினாள். அது மட்டுமன்று, தன் தாய்வீட்டுப் பணத்தை நாடியே தன்னை இவ்வீட்டில் கொணர்ந்தார். ஆதலால், தன் நகைகளையும் அவள் கழற்றி எறிந்து வெளியேறினாள். அவள் உயர் குறிக்கோள் ஒருகணம் அமரைக்கூட வியப்படையச் செய்தது. அண்ணன், அண்ணி, குழந்தை இரேணுகாந்த், ஆகியவர்களிடமே உயிர் வைத்திருந்த நைனாவும் புறப்பட்டாள்.
ஒருவர் இருக்க இடம் போதாத ஏழைக் குடிசையில் அத்தனை பேரும் தங்கினர். சமர்காந்தும் கோபத்தில் வெளிக்கதவை அடைத்துக் கொண்டு தன் அறையில் சன்றுபடுத்தார். வீடு வெறிச்சென்றிருந்தது. சில்லூ கூட அடிக்கடி சுகதா வீட்டுக்கு வந்துவிடுவாள்.
இச்செய்தி கேட்டு இரேணுகா ஓடிவந்தாள். அவள் சமர்காந்தின் மீதே முதலில் முழுக்கோபம் கொண்டாள். ஆனால், அவள் எவ்வளவோ வற்புறுத்தி வேண்டியும், மருமகனோ மகளோ அவன் வீடு செல்லவும் மறுத்தனர்; அவன் பணம் பெறவும் மறுத்தனர்.
மறுநாள் அமர் சேவாசிரமம் சென்று வழக்கம்போல் திரும்பினான். வருவாய்க்கு என்ன வழி என்று சுகதா சுண்டிக் கேட்டாள். "இதோ வழிபார்க்கிறேன்” என்று அவன் வெளியே புறப்பட்டான். இதுவரை முதலாளி இனத்தவனாயிருந்து குனியாது நிமிராது உயர்வாழ்வு கழித்த அவன் துணிமணி விற்பனையாளாக இருந்து தெருத் தெருவாகத் துணிவிற்றான். மக்கள் மலைப்புற்றனர். சிலர் கேலி செய்தனர். பல செல்வர் தடுத்தனர். ஆனால் அவன் செல்வரைத் திட்டிக்கொண்டே தொழிலாற்றினான். என்றாலும் செல்வர் ஆதரவு காட்டினர். வருவாய் சிறிதானாலும் அவனுக்குப் பெரிதாயிருந்தது.
சுகதாவின் தியாகம் கணவன் தன் மதிப்பைவிட்டுச் செல்வதை விரும்பவில்லை. அவள் வழக்குமன்றத் தலைவர் மனைவியை அடுத்து, அவள் ஆதரவால் மாதம் 50 வெள்ளி