38
அப்பாத்துரையம் - 24
வேண்டும்போது கேட்கத் தயங்காதே. இப்போது பட்டாணிச்சி வாயடக்க என்னால் முடியாது. ஊர் முழுதும் எழும் தீ உன்னைக் கவியுமுன் எங்காவது ஓடிப்போ" என்றார்.
ஊர்வாய் மறுநாளே அமர் குடும்பத்தின் மதிப்பைச் சுக்கு நூறாக்கியது. சுகதாவின் கோபம் வெறுப்பாக மாறிற்று. குழந்தையுடன் அவள் பழையபடி மாமன் வீட்டில் அடங்கிக் கிடந்தாள். அமர்காந்த் அறையைவிட்டு வெளிவருவதில்லை. நைனா ஒருத்தி மட்டுமே உள்ளத்தில் அண்ணன் நினைவு மாறாமல் அவனைப் பற்றிய தூற்றலிடையே கூட அவனை வெறுக்காமல் இருந்தாள். அண்ணன் அன்பையும் அவன் தூய உயர் கொள்கையையும் அவள் போற்றினாள்.
அமர் இப்போது நாடோடியாய் ஊர் ஊராய் அலைந்தான். இன்று கண்ட முகம் நாளை காட்சியில் மறைகிறது. இன்று இருந்த ஊரில் அவன் நாளை இல்லை. நாடும் காடும் மலையும் ஆறும் மக்கள் முகங்களும் ஆற்று வெள்ளம் போல் அவனைக் கடந்து செல்கின்றன. அலைந்து காலலுத்தது. தொலை செல்லுந்தோறும் சகீனா நினைவு உள்ளத்தை அறுத்தது. எந்த ஊரிலாவது தங்கி, வாழ்விடம் ஆக்கி, சகீனாவை அங்கே அழைத்து வந்து தனிவாழ்வு வாழ அவன் விரும்பினான். மாதம் மூன்றாகியும் எந்த ஊரும் பிடியாமல் அலைந்தான்.
இரவுகூடத் தங்காமல் அலைந்து ஒரு நாள் காலை அரித்து வாரத்துக்கு அருகிலுள்ள ஒரு ஊரை அடைந்தான். இமயமலையின் அடிவாரம் ஒரு பக்கம் அவன் காலடியிலிருந்து பல அடி கீழே கிடந்தது. அதன் அடர்த்தியான, மங்கிய புகைப்படலங்கள் போன்ற கொடுமுடிகள் ஒன்றன் மீதொன்றாக வடதிசை வானை மறைத்தன. மெல்லருவிகள் தென்றலின் ளமணம் உண்டு இசைபாடின.
ஊர்வெளியில் கிணற்றருகில் ஒரு கிழவி நீர்க்குடத்துடனும் கயிற்றுடனும் வந்தாள். அமர் அவளிடம் "தாயே, நான் நெடுந்தூரம் அலைந்தலுத்தேன். ஒரு நாள் இங்கே தங்க டங்கிடைக்குமா?” என்றான்.
"ஏன் கிடைக்காது, குழந்தாய். என்னுடன் வா. என் வீட்டிலேயே தங்கிச்செல்” என்றாள்.