52
அப்பாத்துரையம் - 24
அமரும் இராமானந்தரும் இணைந்து புரட்சிக்குச் சட்டம் கட்டினர்.
அமர் பேச எழுமுன் நைனாவின் கடிதம் வந்தது. அதில் சுகதாவின் பெருந்தியாகம், அவள் சிறைப்பட்டது ஆகியவை வரையப்பட்டிருந்தன. அமருக்கு மகிழ்ச்சியும் ஊக்கமும் பன்மடங்கு பெருகின. அவனை அறியாமலே அவன் ஆவேசத்துடன் பேசினான். பேசி பேசினான். பேசி முடியுமுன் மக்கள் உள்ளங்களில் புத்தூக்கமும் புதுவேகமும் எழுந்தன. இராமானந்த அடிகள் முதலிய பிற தலைவர்களும் அதே புயல் வேகத்தில் பாய்ந்து முன் சென்றனர்.
புதிய மாவட்ட முதல்வர் சலீமுடன் மாவட்ட முதல் நீதிபதி கஃசன்வீ, அமரின் புதிய போக்குப்பற்றி ஆராய்ந்தார். அவரை இதற்கு முன் இருவரும் வரவேற்றுப் பேசியிருந்தனர். அவன் முன்னேற்றக் கருத்துக்களை அவர்களும் மதித்தனர். ஆனால் அவன் மக்கட்கிளர்ச்சி செய்வது அவர்களுக்குப் புதிதாயிருந்தது. அது அவர்களுக்குப் புரியவில்லை. இப்போது கஃசன்வீ அமரைக் கட்டாயம் சிறைசெய்யவேண்டும் என்று விரும்பினார். அமர், சலீமின் நண்பனாதலால் சலீமே சென்று சந்தடியின்றி அமரை அழைத்துவரும்படி அவர் கூறினார். சலீமும் மோட்டாரில் சென்று அமரை அழைத்துவந்து சிறைப்படுத்தினான். வழியில் முன்னி அவர்களைக் கண்டாள். அமர் தன் சலவை ஆடைகளை வாங்கி அனுப்பும்படி அவளிடம் தெரிவித்ததிலிருந்து அவள் உண்மையை ஊகித்துக் கொண்டாள். உடனே அவள் சென்று ஊர்திரட்டி மோட்டாரை வழிமறிக்க முயன்றாள். அமர் அவர்களிடம் "நீங்கள் சட்டத்தை மதித்து உரிமைக்குப் போராடுங்கள். என் தொண்டை விடாது செய்யுங்கள்” என்று கூறிச் சென்றான்.
சலீமின் அடக்குமுறையை ஊர்மக்கள் உக்கிரமாக எதிர்த்தனர். சலீமும் பொறுமையிழந்தான். சலோனி அவனையே அடக்குமுறையின் பொறுப்பாளராகக் கொண்ட, அவன் மீது கல்மாரி வீசி வைதாள். அவன், அவள் கிழவி என்றும் பாராமல் அடித்துத் துன்புறுத்திக் குற்றுயிராக்கினான். அவள் உடலெல்லாம் நைந்திருந்தது. முகம் உப்பியிருந்தது. கால் எலும்புகள் முறிந்துவிட்டன. பலநாள் படுக்கையில் கிடந்து