உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -2

நகரவை நடுக்கமுறத் தொடங்கிற்று.

57

பணிமனைக்குப் பணிமனை, பணியறைக்குப் பணியறை போலீஸ் - சேமப் போலீஸ்- படைத்துறை யாவும் தொன பேசியில் குரல் பரிமாறிள. அதற்கிடையே ஒரு கோரநிகழ்ச்சி நகரவையையே அதிரவைத்தது. தன் கொடுமைகளுக்கெல்லாம் பணிந்து வளைந்து நின்ற அப்பாவி மனைவியே தன்னை எதிர்த்துப்படைத்தலைவியானது கேட்டான், பாதகன் மணிராம். அவன் அவள்முன் கோப வெறியுடன் சென்றான். அவளை அச்சுறுத்தினான், தடுத்தான்.கைபற்றி இழுக்க முயன்றான். அவள் "இது வீடல்ல நகர். நான் வீட்டில் உம் மனைவி. இங்கே நீர் நகரின் எதிரி, என்னைத் தீண்ட வேண்டாம்" என்றாள்.

66

அவனால் அவமதிப்புப் பொறுக்க முடியவில்லை. கையிலுள்ள கைத்துப்பாக்கி வெடித்தது. நைனா, அமைதித் தெய்வம், அடிவீழ்ந்து சாய்ந்தது போல் சாய்ந்தாள்.

கூட்டம் கொந்தளித்தது, மணிராம் மோட்டார் ஏறித் தப்பினேன் பிழைத்தேன் என்று ஓடினான்.

நைனாவின்

பிணந்தாங்கிய வண்ணம், ஏழைகள் படைகோர அமைதிப் படையாய், புயல் சுமந்து செல்லும் கடல் போலப் புரண்டு நகரவை நோக்கிற்று.

நகரவையின் உறுப்பினர் உடலில் குருதி ஓடவில்லை. யாரும் ஒன்றும் தெரியாமல் விழித்தனர்.

தனிராம் வாய் திறந்தான். “அன்பரே, ஏழைகள் குருதி குடிக்க உங்களைத் தூண்டிய இருவருள் நான் ஒருவன். நான் மாடிவீடு கட்ட எண்ணினேன். என் குடியை மண் ஆண்டது. இனி உங்கள் விருப்பமானால் என் போல மக்கள் துயரால் வாழ்வு வாழ எண்ணிய தலைவரும் என்னை ஒத்த மனமாற்றம் பெறுவதானால், ஏழையர்க்கு ஏழையர் மனையைத் தருவதாக இப்போதே போய் வாக்குக் கூறுவோம். இல்லையென்றால் இறைவன்தான் நம்மைக் காக்க வேண்டும்” என்றார்.

"இனி இறைவன் கூட நம்மைக் காக்கமாட்டார். அவர், ஏழையின் பொறுமையில் குடியிருந்தார். இப்போது அவர் கோர உருவில் நம்மீது பாய்கிறார்” என்றார் தலைவர் ஹாஃவிஸ்.