உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




66

அப்பாத்துரையம் - 24

முடியும்? தொடர்பு இருந்தாலும் ஒரு பேயின் ஆற்றல் உதவிசெய்தாலல்லாமல் அதை எப்படி காணமுடியும்” என்று அவள் தனக்குள் கூறிக்கொண்டாள். கில்லியட் மறுமொழி கூறவில்லை. தானே சென்று அதை வெட்டித் திருப்பினான். தண்ணீர் இரண்டு நாளில் செம்மைப்பட்டது.

"மாயத்தால்தானே அவன் கிணற்று நீரை மாற்றினான்; மாயத்தாலேயே அவன் அதைக் கெடுத்திருக்க வேண்டும்" என்பது இதன் மூலம் அவளுக்கத் தெளிவாயிற்று.

பெண்களை விரும்பாதிருப்பதும், திருமணம் செய்யா திருப்பதும் பேய்ச் சூனியக்காரர்களுக்குரிய இலக்கணங்களுள் சில. இதையும் ஒரு பெண் தேர்ந்து பார்த்துவிட்டாள்.“அயலில் குடியிருக்கும் அன்பரே! நீர் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை? என்றைக்குத்தான் ஒரு மனைவியைக் கட்டிக்கொள்ளப் போகிறீர்?” என்று அவள் கடிதம் எழுதினாள். இதற்கு அவன் “கடற்கரைக் குத்துக்கல் என்றைக்குக் கணவனை அடையும், அன்றே நானும் ஒரு மனைவியை மணப்பது உறுதி” என்று மறுமொழி எழுதியனுப்பினான்.

கடற்கரைக் குத்துக்கல் ஒரு பெண் பேய் வாழும் இடம். அதனருகே பல விலங்குகளின் ஒலிகள் கேட்கும்; விலங்குகள் அருகில் இருக்கமாட்டா.

கில்லியட்டிடம் எல்லாருக்கும் அச்சம். ஆனால் அதே சமயம் அவன் தொட்டால், பல நோய்கள் நீங்கும் என்று று அவர்கள் நம்பினர். அவன் தொட மறுத்தான். மருந்து கொடுத்தே நோய்களைக் குணப்படுத்தினான். இதனால் அவனை

ஆட்கொண்ட பேய் நல்ல பேயல்ல என்று மக்கள்

உணர்ந்துகொண்டனர்!

அவன் குடிப்பதில்லை; புகைப்பதில்லை; புகையிலை கூடத் தொடுவதில்லை. இதுவும் சூனியத்தின் அடையாளமாகவே கொள்ளப் பட்டது, ஏனென்றால் அவன் கோயிலுக்குப் போவதில்லை!

பறவைகளிடமும் விலங்குகளிடமும் அவன் மிகவும் அன்பாயிருந்தான். ஆனால் இதுவும் பேய்களின் கட்டளைப் படிதான் இருக்கவேண்டும் என்று கருதப்பட்டது.ஏனென்றால்