உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -2

67

அவன் மீன்களிடம் கருணைகாட்டுவதில்லை. மீன்பிடிப்பதை ஒரு பொழுதுபோக்காகக் கொண்டிருந்தான்.

டரூசெட்

டெரூசெட், லெத்தியரி என்ற கப்பலோட்டியின் ஒரே வளர்ப்புப் புதல்வி. அவளுக்குத் தாயும் தந்தையும் இளமை யிலேயே இறந்து விட்டார்கள். சிற்றப்பனான லெத்தியரி அவளைக் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்து வந்தான்.

லெத்தியரி பத்து வயதிலிருந்தே கப்பலில் குற்றேவற் பையன் நிலையிலிருந்து படிப்படியாக எல்லாப் பணித் தரங்களிலும் வேலை பார்த்து உயர்வடைந்து, இறுதியில் மீகாமனானவன். ஐம்பதாண்டு கடும்பணியாற்றி வெற்றி பெற்றபின், அவன் ஸெண்ட் ஸாம்ப்ஸனில் பிராவே என்ற பெயருடன் தன் இல்லத்தில் வந்து தங்கினான். கில்லியட்டின் இல்லமான பூ தேலா ரூவும் லெத்தியரியின் இல்லமான பிராவேயும் கடலில் உந்தி நிற்கும் ஒரு நிலமூக்கின் இரு கரையிலும் ஒன்றை ஒன்று அடுத்து இருந்தன.

லெத்தியரி என்றும் மணம் செய்யாமலே இருந்து விட்டான். அத்துடன் அறுபது வயதில்கூட அவன் இளமையின் முறுக்கும் சுறுசுறுப்பும் கனவார்வங்களும் மாறாமலே இருந்தான். கப்பலோட்டியா யிருக்கும்போது அவன் வாழ்ந்த எளிய உ உழைப்பு வாழ்க்கையை அவன் விடவில்லை. ஆனால் இப்போது அவன் பேரளவு பணம் சேர்த்து வைத்திருந்ததனால், அவ் வுழைப்பை வேறு வகையில் திருப்பினான். பணத்தை முதலிட்டுக் கப்பற் கழகம் நடத்துவதில் அவன் கருத்துச் செலுத்தத் திட்ட மிட்டிருந்தான்.

கிலியட்டைப் போலவே லெத்தியரியும் சற்றுப் பண்படாத உள்ள முடையவன். அன்பும்தன் மறுப்பும் பண்பட்ட உள்ளங்களைவிட இருவரிடமும் மிகுதி. கெர்ஸ்னித் தீவைச் சுற்றிலும் ஸென்ட் ஸாம்ப்ஸன், ஸென்ட் பீட்டர்ஸ் போன்ற பல துறைமுகங்கள் இருந்தன. அதுபோலவே கப்பல் களுக்குக் காலனான கொடும் பாறைகளும் பல இருந்தன. நாள் தவறினாலும் வாரந்தவறாமல் அக்கடற்கரையருகே படகுகளும்