உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




74

அப்பாத்துரையம் - 24

கில்லியட்டினிடம் அவள் தாய் இறக்கும்போது கொடுத்த ஒரு இரும்புப் பெட்டி இருந்தது. அதில் ஓர் இளம் பெண்ணுக்கு வேண்டிய ஆடை அணிமணிகள் யாவும் நிரப்பப்பட்டிருந்தன. அவற்றின்மீது ஒரு அட்டைத் துண்டில் “உன் மனைவிக்கு, நீ திருமணம் செய்துகொள்ளும்போது!" என்று அன்னை தன் கைப்பட எழுதியிருந்தாள்! கில்லியட் இப்போது அதை அடிக்கடி எடுத்துத் திறந்துப் பார்ப்பான். அவ் ஆடை அணிமணிகளை அவன் தன் மனக்கண்முன் டெரூசெட்டுக்கு அணிவித்து அழகு

பார்ப்பான்!

காதலின் ஆற்றல் பெரிது. படையின் ஆற்றல், நகர் காவல் படையின் ஆற்றல், வேவுப்படையின் ஆற்றல் ஆகிய எதுவும் அதற்கு ஈடல்ல. கில்லியட் அவ்வாற்றலால் டெரூசெட் என்ன நேரம் என்ன செய்வாள், என்ன நேரம் என்ன உடை உடுத்திருப்பாள் என்பதை அறிந்தான். அவள் விருப்பு வெறுப்புகள் யாவும் அவன் கற்றுணர்ந்தான்

அவன் விரும்பிய மலர்கள், அவள் விரும்பிய காய்கறி கிழங்குகள் அவன் தோட்டத்தில் பயிராயின. யாரிடமிருந்து வந்தனவென்று தெரியாமலே டூஸ் கிரேஸ் என்ற பிராவேயின் பணிப் பெண்டிர் மூலம் அவை பக்தனிட மிருந்து தெய்வத்திடம் சென்று சேர்ந்தன.

“உறங்கினவன் விழிப்பதில்லை”

ஸென்ட்ஸாம்ப்ஸனில் சமய ஊர்வட்டத் தலைவராயிருந்த தூய திரு. ஜாக்கெமின் ஹொட் வின்செஸ்டர் மாவட்ட முதல்வரின் துணைவராக உயர்வு பெற்றிருந்தார். அவரிடத்தில் புதிய ஊர்வட்டத் தலைவராக திரு. எபினிஸர் காட்ரே என்ற ஓர் இளைஞன் வரவிருந்தான். லென்ட் பீட்டர்ஸ் துறைமுகத்தில் சென்று மக்கள் அவனை வரவேற்கக் காத்திருந்தனர். ஆனால் அன்று கடலில் புயலும் பனியும் அடித்துக்கொண்டிருந்தன. இங்கிலாந்திலிருந்து புதிய தலைவரை இட்டுவரவிருந்த காஷ்மீர் என்ற கப்பல் வர நேரமாயிற்று. வழியில் புயலால் அழிந்து அமிழ்ந்த மற்றொரு கப்பலின் ஆட்களை மீட்பதில் ‘காஷ்மீர்’ ஈடுபட்டிருந்ததனால், வருகை தாமதப்பட்டது.