உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி

83

குறையிருந்ததில்லை. மன்னனுடைமைகளையே அவள் தன்னுடமைகளாக உரிமையுடன் ஆண்டு வந்ததால் அவளுக்குத் தனிப்பட எதுவும் கொடுக்க அவனுக்கு வாய்ப்பு ஏற்படவுமில்லை. எனவேதான் அவளுரிமை எண்ணி அவள் சிறுவனுக்கு அரசன் இவற்றை அளித்தான். இவ்வுடைமைகள் மூரட்டின் உள்ளார்ந்த செல்வப் பற்றின்மை, அருட்பணி இயல்புகள் ஆகியவற்றை வெளிக்கொணர உதவின. அவன் தன் செல்வத்தைத் தன் பணியாட்கள் நலனுக்கென ஒதுக்கி, தன் நாடோடி வாழ்வுக்கும் தன் திருத்தொண்டுகளுக்கும் வேண்டிய சிறு தொகையே எடுத்துக் கொண்டான். அவன் ஏழ்மைத் தோற்றம் சிறிதும் அகலவில்லை; அவன் ஏழ்மை மனப்பான்மை தான் அகன்றது. அவன் கலை வளர்ந்தது; அவன் வள்ளன்மை பெருகிற்று. உயர் வகுப்பாரிடை யேயும் விகடகவி என்ற அவன் நிலை சிறிது உறுதிப்பட்டது.அவன் பாக்கள் உயர்குடி மக்களிடையே வாயுரையாக எங்கும் பரந்தன. பாரிஸ் அரண்மனையில்கூட அவை பாடிப் பரவப்பட்டன.

விவிலிய நூற்கதைகள், கருத்துகள், சமயப் பாடல்கள் அவன் கைபட்டுத் திரிந்து உருமாறித் தவித்தன. எல்லாம் காதல், பெண்டிர் பகட்டாரவாரம், விடுதலை, களியாட்டம், கூத்து மயமாக மிளிர்ந்தன, துறவிகள், சமயத் துறையினர் பலரிடையே கூட இவை உள்ளூரப் பாராட்டும் ஆதரவும் பெற்றன! நான்ஸி யிலுள்ள ஒரு கலைக்கழகம் அவனை வெளிப் படையாகப் பாராட்டித் தம் கழக உறுப்பினர் உரிமை தந்து பெருமைப் படுத்திற்று.

வசை தேர்ந்த அவன் கலைப் புகழ் உலகில் பரந்தது. அதே சமயம் அவன் சமயப் பயிற்சியும் நிறைவுற்றதாக அப்பே பார்க்கெட் அறிவித்தார். கோமாட்டி அவனைப் பாரிஸுக்கு அனுப்பி அங்குள்ள மடங்கள் ஒன்றில் மேற்பயிற்சி பெற்று உறுப்பினராக்க எண்ணங் கொண்டாள். இதில் அவன் படித்தரத்தை உயர்த்தவே அவனுக்குப் பண்ணை நிலங்களும் தரப்பட்டன.ஆனால்,ஆக்டேவ் மூரட்டுக்குப் போலந்தில் இன்ப வாழ்வை விட்டுப் பாரிஸுக்குப் போக விரும்பவில்லை. அவன் முதல் தடவையாகத் தன் தாயிடம் மன்றாடினான்.“அம்மா! எனக்குச் சமயத்துறையே பிடிக்கவில்லை. அதைத் தான் உங்களுக்காக ஏற்கவேண்டுமானால், போலந்திலேயே ஒரு பணியில் அமர்த்தலாமே.நீங்கள் உங்கள் வாழ்நாளெல்லாம்