13. துறவியர் மடம்
ஆக்டேவ் மூரட் ஸென்ட் ஸல்பிஸ் துறவியர் மடத்தில் ஓர் உறுப்பினராய்ச் சேர்க்கப்பட்டபோது அவனுக்கு 24 ஆண்டுப் பருவம். லாரைன் இன்னும் சிராம்மோன் ஆகாமல் 13 வயதுக் கன்னிப் பெண்ணாய்த் தாய்மைக் கன்னிமாடத்தில் பயின்று வந்தாள். இரண்டு சமய நிலையங்களும் அருகேதாமிருந்தன.
துறவியர் மடத்தில் ஆக்டேவ் மூரட் இரண்டாண்டுகள் கழித்தான். “சீறும் பகைமைகள், இருள் நிறைந்த பொறாமை உள்ளங்கள், வஞ்சகச் சூழ்ச்சி வலைகள் இவை மற்றப் பொது மக்களிடையே காணப் பெறுவதை விட சமயத்துறைவரிடமும் எவ்வளவோ மிகுதியாக விளங்குகின்றன” என்ற ஆக்டேவின் முடிவு ஸென்ட் ஸல்பிஸ் துறவிமாடத்திலுள்ள அவர் அனுபங் களைக் குறித்துக் காட்டுகின்றன.
துறவிகளிடையேயுள்ள முக்கிய கட்சி வேறுபாடு முதியோர், ளைஞர் என்பதே. இரு சாராரிடையிலுள்ள உள்ளார்ந்த சமயப் பற்றோ நல்லுள்ளமோ சிறிதும் கிடையாது. இளைஞர் போக்கில் ஐயம், ஆவர்கள் களியாட்டங்களில் கண்டனம், அவர்கள் இன்ப ஆர்வம் கண்டு புழுக்கம், அவர்கள் நற்பெயர், செல்வாக்குப் பெறாமல் தடுக்கும் உறுதி ஆகிய இவையே முதியோரின் ஓய்வு ஒழிவற்ற வாழ்க்கைப் பண்புகளாகயிருந்தன. சிறு குறும்புகள், பேரச்சம், இவற்றுள் கரந்து பேரவா ஆகியவை இளைஞர் பண்புகளாயிருந்தன. இவ்விரு சாராரையும் சாராமல் ருந்தவன் திருத்தந்தை டூர்னிக்கெட் அவன் நடுத்தர வயதுடைய வனாயினும் இளைஞரிடம் பொறாமை கொள்ளவில்லை. அதே சமயம் இளைஞரிடம் உள்ள பேரவாவும் குறும்புகளும் அவனைத் தீண்டவில்லை. துறவு வாழ்வு மேற்கொண்டவரிடையே விவிலிய நூலை ஆர்வத்துடன் கற்று அதன் உரைகளை உணர்ச்சியுடன் உருப்பண்ணிக் குடித்தவன் அவன் ஒருவனே