உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

அப்பாத்துரையம் - 30

ஆக்டேவ் மூரட்டிடம் பரிவும் நேசமும் காட்டியவனும் அவன் ஒருவனாகவே அமைந்தான். அவன் சமயப்பற்று, அவன் நகைச்சுவை, அவன் கலையார்வம் ஆகியவற்றைத் தடுக்கவில்லை.

மடத்தலைவன் திரு. குத்தூரியர் ஒருநாள் தன் துறவியர் குழாத்தினரனைவரையும் ஒரு திருக்கூட்டமாகக் கூட்டும்படி பணியிட்டிருந்தான். மடத்தைச் சார்ந்த ஏதோ முக்கிய செய்தி அலசியாராயப்படவிருந்த தென்பது அத்துறவியரின் பர பரப்பிலும் முணுமுணுப்புகளிலும் தெளிவாக விளங்கின. அவர்கள் கண்கள் அடிக்கடி ஆக்டேவ் மூரட்டைக் குறி பார்த்தன.

மூரட் அருகிலேயே இடித்துக் கொண்டுவந்த முது துறவி

ஒருவர் "அப்பனே! உன் முகமெல்லாம் கரி; உன் கைவிரல் களிலெல்லாம் இப்படி மையாயிருக்கிறதே?” என்று கடுப்புடன் கேட்டார். மை எழுத்தாண்மையின் அறிகுறி. துறவிகளுக்கு ஐயத்தையும் கசப்பையும் வளர்க்க எழுத்தாண்மையைவிட வேறு எதுவும் வேண்டாம். மூரட் மீது அவர் தோழர்கள் பெருமுயற்சி யுடன் உருவாக்கிவந்த குற்றச்சாட்டு அவர் எழுத்தாண்மை சார்ந்ததாகவே இருந்தது.

எல்லாரும் வந்து கூடியாய்விட்டது. தலைமையிருக்கையில் மடத் தலைவர் அமர்ந்திருந்தார். முணுமுணுப்பெல்லாம் அடங்கி எல்லாரும் சந்தடியின்றி அவரையே நோக்கினர்.

அமைதிக்கு முற்றுப்புள்ளியிட்டு அவர் எழுந்து பேசலானார். "தோழர்களே! நம் அன்பர் அப்பே ஆக்டேவ் மூரட் நம் எச்சரிக்கைகளை மீறித் தூய தாளில் மீண்டும் அழுக்கு மை கொட்டி வருகிறதாக அறிகிறோம்" என்று அவர் தொடங் கினார். மூரட் அவரை நிமிர்ந்து நோக்கினான். அவரோ “தாங்கள் இப்போது பேச வேண்டாம். சிறிது பொறுத்திருங்கள்” என்று அமைத்துவிட்டு மீண்டும் “இச் செய்தி பற்றி இன்று இக்கூட்டத் தில் முடிவு செய்த பின், நாம் அனைவரும் கை கால்களைத் தேய்ப்புத் தாளும் கல்லுமிட்டுக் கழுவித் தூயநிலையிலேயே நம் பணியில் மீண்டும் ஈடுபடுவோமாக" என்றார்.

குற்றச்சாட்டில் ஆக்டேவ் மூரட் எழுத்தாண்மைத் திறம், அவர் நகைத்திறக் குறும்புகள், நடிப்புத்திறம், தோற்ற நடை