உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி

87

யுடையாவும் வகுத்தாராயப்பட்டன. “விலங்கு, பறவைகள் குரலோசைகளைக் கூடச் செய்து காட்டுவதில் நம் மூரட் திறமையுடைவர். 'கோழி இரு தடவை கூவுமுன் நீ மூன்று தடவை என்னை மறுத்துக் கூறுவாய்' என்று தூய திரு. பீட்டரிடம் இயேசு கூறினாரல்லவா? அந்நிகழ்ச்சியை நான் விரித்துரைக்கும் போது, அதற்குச் செவிப்புலச் சான்று விளக்கமாக மூரட் கோழியாகக் கூவி என் பேச்சுக்கு நாடகப் பண்பு ஊட்டினார்” என்றார் ஒருவர்.

தூர்னிக்கட்டால் இது கேட்டு விலாப்புடைக்க நகைக்காம லிருக்க முடியவில்லை. தலைவர் எச்சரிக்கைகூடச் சிரிப்பை அடக்க உதவவில்லை. அவர் அமைந்தாலும் அவர் முகமும் உடலும் அமைய மறுத்துக் கலகலத்து நகைப்பில் குலுங்கின. தலைவர் சீற்றம் இதனால் மிகுந்தது. அப்படியும் பக்கத்திலிருந்த தோழர் ஒருவர் தந்த மூக்குத்துளை நிரம்ப இழுத்து மூளைக்கு வேறு திசையில் கவனமூட்டிய பின்பே அவர் சிரிப்பு அடங்கிற்று.

தலைவர் யாவரையும் கையுயர்த்தி எச்சரித்து விட்டு குற்றப் பத்திரிகை வாசித்தார்.

66

'திரு அப்பே ஆக்டேவ் மூரட் இன்ப நாட்டமுடையவ ராயிருக்கிறார்.அவர் பேச்சும் எழுத்தும் பிறருக்கு இன்பமூட்டும் தன்மையுடையவையாகவே இருக்கின்றன. இவை ஒரு மடத்துக்கு உகந்தவையா? ஒரு துறவிக்குப் பெருமை தருபவையா? நம் மடத்துக் கட்டுப்பாடுகள் அவர் ஆர்வங்களை அடக்க முடிய வில்லை. அவை அதை இன்னும் தீட்டிப் பளபளப்பாக்குகின்றன. அவர் துறவியர் பணிக்கு ஏற்றவரல்லவர் என்றே நான் எண்ணுகிறேன்.'

"இது அவரே அறிந்து ஒத்துக்கொள்ளும் செய்தியாயிற்றே! ஆயிரம் தடவை அவர் கூறியிருக்கிறார் இதை. மேலும் மனத்திலுள்ளதை வெளியிடும் வாய்மையை ஒழித்துப் பொய்மை நடிப்பதிலும் மாள்வதே மேலானது என்னும் அவர்தம் கொள்கையை வலியுறுத்தியுள்ளார். ஆகவே, இது அவர் குற்றமோ. அவர்மீது குற்றச்சாட்டோ ஆகாது. அவரை ஏற்றுக் கொண்ட நம் குற்றமும் நம்மீதுள்ள குற்றச்சாட்டுமே ஆகும்” என்றார் தூர்னிக்கட்.