உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

அப்பாத்துரையம் - 30

தலைவர் குத்தூரியர் அவரை மீண்டும தடுத்துத் தொடர்ந்து பேசினார்.

“ஆம்! அவரே ஒத்துக் கொள்கிறார். இது குற்றச்சாட்டை உறுதிப் படுத்துகிறது. நம் குற்றச்சாட்டைப் பற்றி அவரே தம் ஆசிரியர் அப்பே பார்க்கட்டுக்கு எழுதுகிறார்; நான் அனைவராலும் குற்றம் சாட்டப்படுகிறேன் - குற்றச்சாட்டும் நேர்மையற்றதன்று என்று, தாய்க்கு எழுதும் கடிதத்திலோ இங்கே அழகுடைய பொருள்களுக்குக் குறைவில்லை அழகுடைய சிறுமிகள் பலர். எதைப்பற்றியும் நான் கவிதை எழுதத் தவறுவதில்லை எல்லாரையும் காதலிக்கிறேன் யாரை க் காதலிப்பது, யாரைக் காதலிக்காமலிருப்பது என்று வேற்றுமைப் படுத்த முடியாததனால்!' என்று எழுதுகிறார். அன்னையிடம் கூட இவர் வேறு செய்திகள் எழுதமுடியவில்லை” என்றார் தலைவர்.

குற்றச்சாட்டு யாவராலும் ஆதரிக்கப்பட்டது. ஆனால், அவர் போலந்து அரண்மனைச் சிறுவராதலால், அவரைத் தாமாக நீக்கி, அரசர் பகைமையை வாங்கிக் கொள்ள மடத்துத் துறவிகள் துணியவில்லை. அவரைக் கொண்டே அதைவிட்டுச் செல்ல இணக்கம் பெறுவிப்பதென்று அவர் முடிவு செய்தனர். இம் முடிவைத் தெரிவிக்கும்படி ஆக்டேவ் மூரட் அழைத்துவரப் பணிக்கப் பெற்றார்.

மூரட் அச்சமயம் ஃபிரஞ்சு நாடு மன்னவையிலுள்ள தம் அத்தைக்குக் கடிதம் வரைந்து கொண்டிருந்தார். அழைப்புக் கொண்டு வந்தவனிடம் “இதோ வருகிறேன் என்று சொல்” என்று கூறியவராய் மீண்டும் கடிதத்தில் ஆழ்ந்துவிட்டார். காத்திருந்த துறவியர் கூட்டம் கலைந்தது. பின் வழிபாட்டு நேரம் வந்தது. அதற்கான மணி அடித்தது. யாவரும் தொழுகை மேடை சுற்றிக் கூடினர். மூரட் கடிதம் அப்போது முடிவுபெறவில்லை. தொழுகையின் அவரச மணிகூட அக்கடிதத்தின் ஒரு நகையாடற் குறிப்பாயிற்று. "இக்கடிதத்தை இன்னும் நீட்டிக்க முடியவில்லை. அதோ கடவுள் தொழுகை மணியடித்து அழைக்கிறார். இங்கே ஓயாது தொழுகை மீது தொழுகையாய், தொழுகையே தொழிலாய் இருக்கிறது. கடவுள் ஒரு கலைஞராயிருந்தால்., அவர்கூடச் சலிப்புத் தட்டாமல் எப்படி ஓயாது ஏன் ஏன் என்று