உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

உறவும் பொறுப்பும் புறக்கணித்தே

உதவா பொய்மூட்டைகள் வீசிஎறிந்தேன்;

இறைவா! பொய்மை மரபின்றேல்

அப்பாத்துரையம் - 30

நரக கதியெனில், அது ஏற்பேன்! வாழ்வின் இன்பம் நான் துய்ப்பேன் அது பழியாம் எனின், அது பழியாகுக, துறவோர் மரபு தொலைத்திட்டேன் துளங்கும் அதன்புகழ் பிறர்க்காகுக, துறவின் துறவே எனக்காகுக.

என்று அவன் பாடிக் கொண்டு சென்றான்.

அவன் போனது பற்றி மடத்துறவியர் கழிவிரக்கம் கொள்ள வேயில்லை. அவன் மடத்திலிருக்கையில் புனைபெயருடன் எழுதிய "கோலகொண்டா அரசி, அலைன்" வால்ட்டேரால் கூடப் புகழப்பெற்றது. அதன் ஆசிரியர் மூரட்தான் என்று அரண்மனை யெங்கும் தெரிந்துவிட்டது. உலகம் புனைகதை எழுதிய துறவியைப் புகழ்ந்தது. ஆனால், துறவி மடம் இப்பாராட்டைக் கண்டனமாகக் கருதியது. தம் மடத்தின் பெயருடன் அவன் தொடர்பறுந்ததே நல்லது என்று கருதி அவர்கள் நீண்ட பெருமூச்சு விட்டனர்.