உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. லக்ஸம்பர்க் கோமகன்

-

அப்பே ஆக்டேவ் மூரட் இப்போது அப்பே (துறவித் தந்தை) ஆகவில்லை. அவன் உடலில் பழைய தட்டுத் தடங்கலற்ற துடிப்பும் இயற்கை ஊக்கமும் பரந்தன. அவன் நடை உடை தோற்றம் எப்போதும் போலவே அசட்டைத் தன்மை வாய்ந் தாயினும், மடத்தின் கட்டுப்பாடும் பருவத்தின் இயல்பும் தம் வேலையை ஓரளவு செய்திருந்தன. அவன் தோற்றத்தில் இப்போது அசட்டைத்தனம் இருந்தது ஆனால், அது அருவருப்பும் ஊட்டத் தக்கதாகவே இருந்தது. உயர்குடி மக்களிடையேயுள்ள மரபுகளில் சில அவன் இயற்கை யோடியற்கையாகப் படிந்துவிட்டன. அவ்வப்போது உரையாடல் மேடையில் அவன் திடுமெனப் பேச்சை நிறுத்தித் தூங்கி விடுவான். அவனிடமிருந்து நீக்க முடியாத பழைய கெட்ட பழக்கம் இதுவொன்றே. ஆனால், இதுகூட எவர் வெறுப்பையும் தூண்டவில்லை. ஏனெனில், அத்தூக்கத்திலிருந்து அவன் எதிர்பாராது எழுந்ததும், தூக்கத்துக்கும் சேர்த்து வட்டியுடன் ஏதாவது நகைத்திறமுடைய துணுக்கு, குறும்புமிக்க வசை அல்லது இயற்கை வாய்மையுடைய கவிதைஆகியவற்றை வாரிக்கொட்டுவான்.அவன் வழக்கம் போலப் பொதுமக்களிடையே எதிர்பாரா நண்பனாகவும் இன்னருட் குறும்புத் தெய்வமாகவும் உலவினான். ஆனால், அதே சமயம் உயர்குடியினரிடையிலும் அவன் ஒரு நல்ல பொழுது போக்குக் கவிஞனாய், விகடகவியாய் விளங்கினான்.

அவன் பல இடங்களிலும் சுற்றித்திரிந்து இப்போது பாரிஸ் வந்து தன் அத்தை லக்ஸம்பர்க் கோமகளில்லத்தில் தங்கினான்.

லக்ஸம்பர்க் கோமகள் பாரிஸின் காதலரசியாக இருந்த காலம் ஒன்று உண்டு. அப்போது அவள் உயர்குடியினரால் மதிப்பும் பெற்றதில்லை. உயர்குடி இளைஞரை மட்டுமே அவள் கவர முடிந்தது. அவள் பகட்டு வாழ்வு இளமையின் எல்லை