உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

II-

அப்பாத்துரையம் - 30

தாண்டவில்லை. ஆனால், இப்போது இளமையின் இயற்கை யெல்லையை அணுகுந்தோறும், அவள் காதலரசியாக மட்டுமிராமல், கலையரசியாகவும், பண்பரசியாகவும் உருமாறி வந்தாள். அவள் இன்னும் பேரழகுயுடையவளாகவே இருந்தாள். அவள் செல்வமும் அனுபவமும் உயர்குடியினர் மதிப்பை விலைபெற்றன. பொது மக்களையும் அவள் வாழ்க்கை மாறுதல் வயப்படுத்திற்று. அவள் ஞாயிறு தவறாமல் திருக்கோயில் சென்று மண்டியிட்டு வழிபாடாற்றத் தொடங்கினாள். வழியில் ஏழையரிடம் பரிவு காட்டிப் பெரும்பண்பின் மதிப்புப் பெற்றாள். அவள் இல்லத்தில் நாள்தோறும் வந்து குழுமும் இரவலர்களுக்கு அவள் தன் நீண்ட பிரம்பின் நுனியால் வெள்ளி பொன் நாணயங்கள் வழங்கி வள்ளன்மை உரிமை கோரினாள். இப்புது முறைகளுக்கேற்ப அவள் தோழமையும் இளங் காதலருக்குக் கட்டுப்பட்டிராமல், சீமான்கள், சீமாட்டிகள், கலைஞர், கற்றோர் ஆகியவரை உட்படுத்திற்று.

கோமகள் மாறிய வாழ்வுக்குக் கவிதையஞ் செல்வன் ஆக்டேவ் மூரட்டின் வருகை எல்லா வகையிலும் பொருத்த மாயிருந்தது. காதல், கவிதை, பெருமிதம், வசை, ஓசைத்திறம் ஆகியவற்றின் ஒரு கூட்டாக விளங்கிய அவள் வாழ்வு அதே பண்புகளை யவாவிய கோமான் வாழ்விற் பதித்த ஒரு முத்தாயிற்று. அவ்வாழ்வின் பல்வண்ண மணி ஒளிகளிடையே அதன் தூய வெண்ணகை முறுவலித்து முகிழ்ந்தது.

இயற்கையின் அழகிடையே பலவண்ணப் புதுமைகள் திரைநீக்கி இடையிடையே தலைகாட்டுவதுண்டு.

வாழ்க்கையின் செயற்கை வனப்பினிடையே இத்தகைய புது வண்ணங்கள் மறைந்து நின்று நகையாடும். மூரட்டின் அரைத் துயில் கனவுகள் இவற்றைத் தம் அகக் கண்ணால் கண்டு தம் மின்னற்கலை யுரைகளால் தீட்டிக் காட்டும். மயிலென நடந்து திரியும் மாதர் இடுப்பகலத்தை மிகைப்படுத்திக் காட்டும் உட்கட்டு வைத்த கச்சைகளின் ஊசலாட்டமும்,ஆடலிடையே வெளிப்பட்டு மின்னும் செம்பஞ்சுக்குழம்பூட்டிய அவர்களது செஞ்செவேலன்ன சிவந்த உள்ளங் கால்களும், எல்லாரிடமும் ஒப்புரவுடன் ஊடாடுவது போலப் பாவித்து உண்மையில் தம் காதலியர் திசையிலேயே அடிக்கடி நடமாடும் ஆடவர் கண்ணோக்கையும்,