உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

அப்பாத்துரையம் - 30

மாது சிராம்மோன் இப்போது கைம்பெண். கணவன் இறந்து ஆண்டுகள் மூன்றாகிவிட்டன. ஆனால், அவள் தன் கைம் பெண் கோலத்தை இன்னும் களையவில்லை. துயர் ஆடையாய் மேற்கொண்ட கறுப்பு நிலையாகவே அவள் தூய வெண்பொன் நிறத்தை எடுத்துக் காட்டும் நல்லாடையாக விளங்கிற்று. கைம்மைக் கோலமோ, தாய்மையோ அவள் கன்னியழகில் பெருமாறுதல் உண்டு பண்ணவில்லை - உண்டு பண்ணிய மாறுதலும் அவற்றின் ஒளியைப் பெருக்கி அமைதியால் வனப்பூட்டியதேயன்றி வேறன்று.

இயற்கையின் எளிமையில் ஆர்வங்கொண்டும் அதனால் நிறைவடையாத மாது சிராம்மோன் மாளிகை விருந்துகளிலும் கலந்து கொள்ள முடிந்ததே தவிர, முழுவதும் அதனால் நிறைவு பெற முடியவில்லை. அவள் உள்ளத்தின் துன்ப மின்னதென்றும் அவளால் குறிப்பிட்டுணர முடியவில்லை. கணவனிடம் அவள் நேசம் பெரிது. அவன் இறந்ததற்காக அவள் உள்ளூர வருந்தினாள். ஆனால், ஓராண்டுக்குப் பின்னும் அவள் வருத்தம் குறையவில்லை. கணவன் பிரிவால் வந்த வருத்தமாயிருந்தால் தானே நாள் செல்லச் செல்லக் குறையும்? பிள்ளைகளிடம் அவள் தன் உயிரையே இரு கூறிட்டு உரித்து வைத்திருந்தாள்.அவர்களைக் காணும்போது அவள் உள்ளம் மகிழ்ச்சியும் ஆறுதலும் பெற்றது. ஆனால், அவ்வுணர்ச்சியின்போது பாசிபடர்ந்த குளத்தில் விழுந்த கல் சிறிது பாசியை விலக்குவது போல, அம் மகிழ்ச்சி அவள் நிலையான துன்பத்தைச் சிறிதே அகற்றிப் பின் மீண்டும் பழைய நிலைமையிலேயே கொண்டுபோய் விட்டது.

டீ லீஞ் தந்த அவ்விருந்தில் அவள் உரையாடல்கள் எல்லாராலும் வியந்து பாராட்டப்பட்டன. அடிக்கடி ஆக்டேவின் பாடலும் அவள் காதில் விழுந்தது. அப்பாடல்களை அவள் அடிக்கடி உயர்குடி விற்பன்னரால் மேற்கோளாக எடுத்துக் காட்டப்படுவது கண்டும் அவ்வப்போது அவற்றின் நயம் பாராட்டியும் உள்ளாள். இன்று அக்கவிஞனே விருந்தில் கலந்து கொண்டுள்ளான் என்றும் அவள் கேட்டாள். ஆனால், விருந்தின் அமளியில் அவள் அவனைக் காணவில்லை. விருந்தின் குடியாட்டில் அவள் ஒதுங்கியிருந்தாள்.